திரையின் மறுபக்கம்திரையின் மறுபக்கம் என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் குற்ற அதிரடித் திரைப்படமாகும்.[1] இப்படத்தை நிதின் சாம்சன் இயக்கியிருந்தார். நிதின் சாம்சன் தயாரித்திருந்தார். இப்படத்தில் முகமது கோஸ், ஹேமா ஜெனிலியா ஆகியோர் நடித்திருந்தனர். துணை வேடங்களில் நடராஜன் மணிகண்டன், நிதின் சாம்சன், ஸ்ரீ ரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் இசையை அனில் நலன் சக்ரவர்த்தியும் ரித்திக் மாதவனும் மேற்கொண்டனர். ஒளிப்பதிவை நிதின் சாம்சன் மேற்கொள்ள படத்தொகுப்பை நிசாந்த் சாம்சன் மேற்கொண்டார்.[2] நடிகர்கள்
தயாரிப்புஇப்படத்தின் படப்பிடிப்பு புளோரிடாவில் சில காட்சிகளுடன் சென்னை, செங்கல்பட்டில் படமாக்கப்பட்டது.[3] வரவேற்புமாலை மலரின் ஒரு விமர்சகர், "திரைப்படத் துறையில் சில இடங்களில் நடக்கும் உண்மை நிலையை இப்படம் அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது" என்று எழுதினார்."[4] தினத்தந்தி விமர்சகர், "விறுவிறுப்பான, சுவாரசியமான திரைக்கதையில் விழிப்புணர்வுப் படமாக காட்டப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது" என்று கூறினார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia