திரௌபதி வஸ்திராபகரணம்
திரௌபதி வஸ்திராபகரணம் (Draupadi Vastrapaharanam) 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேலம் ஏஞ்சல் பிலிம்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி, செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] நடிகர்கள்![]()
பாடல்கள்இத்திரைப்படத்தில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2] தயாரிப்புஸ்ரீ கிருஷ்ண லீலா தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்த சேலம் ஏஞ்சல் பிலிம் நிறுவனத்தினரால் கல்கத்தா பயனியர் பிலிம் கலையகத்தில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. சென்னை மாகாண நாடக மேடைகளில் நடித்துப் புகழ்பெற்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.[2] இதே பெயரில் 1917 ஆம் ஆண்டில் ஆர். நடராஜ முதலியார் ஓர் ஊமைப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தார்.[1] திரைக்கதைமகாபாரதம் காப்பியத்தில் வரும் தாயக் கட்டைப் போட்டி, மற்றும் திரௌபதி துகிலுரிதல் ஆகிய நிகழ்வுகளைக் கொண்டு இதன் திரைக்கதை எழுதப்பட்டது.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia