தி இந்தியன் லேடீஸ் மேகசின்
தி இந்தியன் லேடீஸ் மேகசின் (1901–1938) (The Indian Ladies' Magazine) என்பது இந்தியாவில் பெண் ஒருவரால் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்ட முதல் ஆங்கில பெண்கள் பத்திரிகை ஆகும்[1]. இதன் நிறுவன ஆசிரியர் கமலா சத்தியநாதன் ஆவார். தொடக்கமும் செயல்பாடுகளும்கமலா சத்தியநாதன் 1901ஆம் ஆண்டு ‘தி இந்தயன் லேடீஸ் மேகஸின்’ பத்திரிக்கையைத் தொடங்கினார். இந்தப் பத்திரிக்கையை தொடங்கி நடத்துவதற்கு உந்துதலாக இருந்தவர் கமலாவின் கணவர் சாமுவல் சத்தியநாதன் ஆவார்[2]. இந்தப் பத்திரிக்கை சென்னை சாந்தோமிலிருந்து அச்சேறியது. ஒவ்வொரு மாதமும் 12ஆம் தேதி இந்த இதழ் வெளிவந்தது.[3]. இந்தப் பத்திரிகை பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்தக் கருத்துக்களைப் பதிவு செய்தது[4]. ஒவ்வொரு இதழின் முதல் பக்கமும் ஆங்கிலப் பாடலுடன் தொங்குகிறது. இதனைத் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், சாதனை பெண்களின் படங்களும் குழந்தைகளுக்கான பக்கங்களும் இடம்பெற்றுள்ளன[5]. இறுதிப் பக்கத்தில் சமையல் குறிப்புகளும் தையல் குறிப்புகளும் இடம்பெற்றன. பெண் கல்வி குறித்து சிறந்த கட்டுரை அனுப்பும் வாசகர்களுக்குப் பரிசுத் தொகை போன்ற போட்டி அறிவிப்புகளும் இறுதிப் பக்கத்தில் இடம் பெற்றிருந்தன[6]. ![]() 1919ஆம் ஆண்டு கமலா தனது குழந்தைகளின் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். பத்திரிக்கையின் பொறுப்பை அவரின் சகோதரியான என்சுமேனிடம் ஒப்படைத்தார். ஆனால் பத்திரிகை சரியாக இயங்காமல் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தியா திரும்பிய கமலா, 1927ஆம் ஆண்டு தனது பத்திரிகையை தொடர்ந்து நடத்தினார். இம்முறை, கமலா தன் மகள் பத்மினியை துணை ஆசிரியராக நியமித்தார்[2]. 1927 முதல் 1938 வரை வெளிவந்த இந்தியன் லேடீஸ் மேகசின் இதழ், அடிப்படை நோக்கம் மாறாமல் தொடர்ந்தது. பெண்களின் பங்களிப்புஅரசியல் ஆர்வலரும் கவிஞருமாகிய சரோஜினி நாயுடு, எழுத்தாளரும் கல்வியாளருமான பேகம் ரொக்கையா, இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னேலியா சோராப்ஜி, அன்னி பெசண்ட், பெண்ணியவாதியும் கல்வியாளருமான பண்டித இராமாபாய், மோனா என்சுமேன் என இந்தியாவின் பல பெண் அறிஞர்களின் கட்டுரைகளும் கதைகளும் இந்தப் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. ஆங்கிலோ இந்தியன் எழுத்தாளர்களும் இந்த இதழில் தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர்[5]. நிறுத்தம்இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் காலத்திலிருந்து 1930களின் சத்தியாகிரகக் காலம் வரை இந்தியப் பெண்களின் வளர்ச்சியைப் பதிவு செய்து வந்த ‘தி இந்தியன் லேடீஸ் மேகசின்’ 1938 சனவரி மாதத்திற்குப் பிறகு எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia