தீபிகா பள்ளிக்கல்
தீபிகா பள்ளிக்கல் ஒரு இந்திய சுவர்ப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். உலக மகளிர் சுவர்ப்பந்து போட்டி தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் வந்த முதல் இந்திய விளையாட்டு வீரர் ஆவார்[1]. இவர் 2011-ம் ஆண்டு 3 WISPA பட்டங்களைப் பெற்று தன் விளையாட்டு வாழ்வில் சிறந்த தரவரிசை இடமாக 13-ம் இடம் பெற்றார். அதன் பின்னர்2012-ம் ஆண்டு அந்த தரவரிசை இடத்தையும் தாண்டி முதல் 10 இடத்திற்குள் வந்தார். தனி வாழ்க்கைதீபிகா பள்ளிக்கல் என்று அறியப்படும் தீபிகா ரெபக்கா பள்ளிக்கல் 21 செப்டம்பர் 1991-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சிரியன் கிறித்தவ பெற்றோருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். நவம்பர் 15, 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிக்கா இருவரும் திருமண நிச்சயம் செய்து கொண்டனர். இவர் தனது முதல் பன்னாட்டு பந்தய விளையாட்டை லண்டனில் விளையாடினார். இதுவரை ஜெர்மன் ஓபன், டட்ச் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்றுள்ளார். தொழில் வாழ்க்கைதீபிகா பள்ளிக்கல் 2006-ம் ஆண்டு முதல் தொழில்முறை சுவர்ப்பந்து விளையாட்டு வீரரானார். தொடக்க காலத்தில் பல ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்த இவரது தொழில் வாழ்க்கை, 2011-ல் எகிப்தில் இவர் எடுத்துக்கொண்ட பயிற்சிக்குப் பிறகு சீரானதாகவும், பல வெற்றிகளுடையதாவும் மாறியது[2].
தங்க பதக்கம்2014ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்தில் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். தேசிய சுவர்ப்பந்து சாம்பியன்ஷிப் புறக்கணிப்புதேசிய சுவர்ப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பரிசு தொகை வேறுபாட்டை களைய வலியுறுத்தி தீபிக்கா பள்ளிக்கல் நான்காவது ஆண்டாக போட்டிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.[4]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia