தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்

தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்
சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில், தீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°55′00″N 79°04′25″E / 9.9167°N 79.0737°E / 9.9167; 79.0737
பெயர்
வேறு பெயர்(கள்):தீ அயனூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்,
உத்திரட்டாதி நட்சத்திரப் பரிகாரத் தலம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:தீயத்தூர்
சட்டமன்றத் தொகுதி:அறந்தாங்கி
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
ஏற்றம்:32.26 m (106 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சகஸ்ரலட்சுமீசுவரர்
தாயார்:பெரியநாயகி
குளம்:தாமரைக்குளம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீயத்தூர் என்ற தீயத்தூர் வடகோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் சகஸ்ரலட்சுமீசுவரர் மற்றும் தாயார் பெரியநாயகி ஆவர்.

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.26 மீட்டர்கள் (105.8 அடி) உயரத்தில், (9°55′00″N 79°04′25″E / 9.9167°N 79.0737°E / 9.9167; 79.0737) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தீயத்தூர் பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில் (தமிழ்நாடு)

தலவரலாறு

மகாவிஷ்ணு தினமும் சிவபூசை செய்யும் போது ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு சிவனை அர்ச்சித்து வழக்கம். ஒருநாள் பூசையின் போது ஆயிரம் மலர்களுக்கு ஒன்று குறைவானதால் அவருடைய கண்ணை மலராக நினைத்து அதை அர்ச்சிக்க எண்ணி, கண் ஒன்றைப் பிடுங்க முயற்சித்தார். அக்கணமே, சிவன் அவர்முன் தோன்றி அச்செய்கையைத் தடுத்து அருள்புரிந்தார். இதனையறிந்த மகாலட்சுமியும் சிவதரிசனம் பெற நினைத்தார். முனிவர் அகத்தியரரின் ஆலோசனைப்படி, பூலோகத்தில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அங்கு ஆயிரம் மலர்களைக் கொண்டு சிவனை அர்ச்சித்து வழிபட்டார். இச்செயலால் அகமகிழ்ந்த சிவன், அவ்விடத்தில் இலட்சுமிக்கு தரிசனம் கொடுத்து, அவ்விடத்திலேயே கோயில் கொள்ளவும் செய்தார். அவ்விடமே இப்போதைய தீயத்தூர் திருத்தலம்.[2]

தல பெருமை

தேவ சிற்பி விசுவகர்மா, அகிர்புதன் மகரிசி, அக்னி புராந்தக மகரிசி மற்றும் ஆங்கிரச மகரிசி ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பிறந்தவர்கள். அவர்களும் மகாலட்சுமிக்கு காட்சியருளிய சகஸ்ரலட்சுமீசுவரரைத் தரிசிக்க எண்ணி அரூப வடிவில் ஒவ்வொரு மாதமும் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று இத்தலத்திற்கு சிவ ஹோமம் செய்து வழிபட வந்து செல்வதாக ஐதீகம்.[3]

விசேட பூசை

ஒவ்வொரு மாதமும் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று இக்கோயிலில் ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.[4]

இதர தெய்வங்கள்

பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், சண்டிகேசுவரர், வாஞ்சா கணபதி, விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், நந்தி, சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள், பைரவர் மற்றும் நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[5]

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. Retrieved 2024-09-25.
  2. "அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர் – Aalayangal.com". koyil.siththan.org. Retrieved 2024-09-25.
  3. "Sahasra Lakshmeeswarar Temple : Sahasra Lakshmeeswarar Sahasra Lakshmeeswarar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-09-25.
  4. வசீகரன் (2023-06-13). "தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்". TamilMani.News. Retrieved 2024-09-25.
  5. "அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்". hindusamayams.forumta.net. Retrieved 2024-09-25.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya