துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
துபாய் பன்னாட்டு அரங்கம் (Dubai International Stadium, முன்னர் துபாய் விளையாட்டு நகர அரங்கம் என அழைக்கப்பட்டது) என்பது ஐக்கிய அரபு அமீரகம், துபாய் நகரில் அமைந்துள்ள பல-நோக்கு அரங்கம் ஆகும். இவ்வரங்கில் முக்கியமாக துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்து அமீரகத்தில் உள்ள மூன்று விளையாட்டரங்குகளில் ஒன்றாகும். ஏனையவை: சார்ஜா துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு ஆகியனவாகும். துபாய் பன்னாட்டு அரங்கத்தில் 25,000 இருக்கைகள் உள்ளன, இது துபாய் விளையாட்டு நகரின் ஒரு பகுதியாகவும் உள்ளது. வரலாறு2009 ஏப்ரல் 22 இல், முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி ஆத்திரேலிய, பாக்கித்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்றது. பாக்கித்தான் இப்போட்டியில் வென்றது. முதலாவது தேர்வுப் போட்டி பாக்கித்தானுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் 2010 நவம்பரில் நடைபெற்றது. இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia