துபை மெட்ரோ
துபை மெட்ரோ (துபாய் மெட்ரோ) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை அமீரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுனர் அற்ற முழுத் தன்னியக்கமாக இயங்கும் நகரத் தொடருந்து வலையமைப்பு ஆகும். இவ்வலையமைப்பின் சிவப்புப் பாதை () என அழைக்கப்படும் பாதையின் ஒரு பகுதி இயங்குகின்றது. இன்னொரு பகுதியான பச்சைப் பாதையின் கட்டுமான வேலைகள் நடைபெறுகின்றன. முழுமையான திட்டத்தில் வேறு பாதைகளும் உள்ளன. நகரத்தின் மையப் பகுதியில் இவ்விரு பாதைகளும் நிலத்தின் கீழ் இயங்குகின்றன. ஏனைய இடங்களில் நிலத்திலிருந்து உயரத்தில் தூண்களினால் தாங்கப்படும் பாதைகளில் இயங்குகின்றன. தொடர்வண்டியும், நிலையங்களும் வளிப்பதனம் செய்யப்பட்டுள்ளன. சிவப்புப் பாதையில் 10 நிலையங்களை உள்ளடக்கிய பகுதி 2009 ஆம் ஆண்டு 9 ஆவது மாதம் பி.ப 9 மணி 9 நிமிடம் 9 செக்கன் நேரத்தில் துபை அமீரகத்தின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம அமைச்சருமான சேக் முகம்மது பின் ரசீத் அல் மக்தூமினால் திறந்து வைக்கப்பட்டது. அடுத்தநாள் காலை மு.ப. 6 மணிக்கு இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடபட்டது. அரபுக் குடாநாட்டில் அமைக்கப்பட்ட முதல் நகரத் தொடருந்து இதுவே. துபை மெட்ரோ இயங்கத் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் 110,000 பேர் இதில் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது துபையின் மக்கட்டொகையின் 10% ஆகும். 20 கி.மீ. நீளமான பச்சைப் பாதை திறக்கப்பட்டதும், தற்போது உலகின் மிகநீளமான முழுத் தன்னியக்கமான நகரத் தொடருந்தாக விளங்கும் வான்கூவர் ஸ்கைட்ரெயினை விட 3 கி.மீ கூடுதலான நீளம் கொண்டதாக அமைந்து. இவ்வகையைச் சேர்ந்த உலகின் நீளமான நகரத் தொடருந்தாக ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia