துளிர் (இதழ்)

துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
துளிர்
துளிர்
ராமானுஜம்
வகைஅறிவியல்
இடைவெளிமாதம் தோறும்
வெளியீட்டாளர்சி. ராமலிங்கம்
நிறுவனம்தமிழ்நாடு&புதுவை அறிவியல் இயக்கம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்thulirmagazine.com

துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் ஆகும். இவ்விதழை புதுவை அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து கடந்த 26 ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் வெளி வருவது என்றில்லாமல் சமூக அறிவியல், சூழலியல் என்று பலதரப்பட்ட பொருள்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகிறது. துளிர் படிப்பவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது துளிரின் முக்கியப் பணி ஆகும். அறிவியலுக்குப் புறம்பான விஷயங்கள், பலவிதமான மூடநம்பிக்கைகள் இவற்றைச் சாடும் பணியையும் துளிர் செய்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் மக்கள் மத்தியில் பல்வேறு அறிவியல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. துளிரில் வரும் படைப்புகள் மூலமும் இத்தகைய அறிவியல் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது (உதாரணம்: தேசிய அறிவியல் நாள், ஹிரோஷிமா, நாகசாகி தினம், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் வினாடி வினா).

பாடப்புத்தகதன்மையற்ற படைப்புகளை வெளியிடுவதில் துளிர் அதிகக் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் அறிவியலை தங்கள் சூழலோடு ஒன்றிப் பார்த்து புரிந்து கொள்ளவும், அவர்களே அறிவியலைச் செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளவும் துளிர் ஊன்றுகோலாக இருந்து செயல்படுகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமான படைப்புகளும் (கதை, புதிர்கள்) துளிரில் வெளிவருகிறது.

பெரும்பாலும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் (6,7,8 வகுப்பு மாணவ மாணவியர்) புரிந்து கொள்ளும் இதழாகவே துளிர் தயாரிக்கப் படுகிறது. துளிர் வாசகர்களாகச் சிறுவர் சிறுமியர் மட்டும் இல்லை. துளிரை அவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள், அறிவியல் இயக்க ஆர்வலர்கள், முகவர்கள், பெற்றோர்கள் என்று துளிருக்கு ஒரு விரிவடைந்த வாசகர் வட்டம் உள்ளது.

துளிர் தொடர்பு முகவரி: 245 , அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya