துவாரகேசுவர் ஆறு
துவாரகேசுவர் ஆறு (Dwarakeswar River)(தல்கிசர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதியின் முக்கிய ஆறாகும். ஆற்றோட்டம்இந்த ஆறு புருலியா மாவட்டத்தின் மாதபூருக்கு அருகில் உருவாகி பாங்குரா மாவட்டத்தில் சாட்னாவில் நுழைகிறது. இது மாவட்ட தலைநகர் வழியே பாய்ந்து கிழக்கு பர்தாமன் மாவட்டத்தின் தென்கிழக்கு முனையில் நுழைகிறது. பின்னர் ஹூக்லி மாவட்டம் வழியாகச் செல்கிறது.[1] சிலாய் ஆறு துவாரகேசுவர் ஆற்றுடன் கட்டாள் அருகே இணைகிறது. இந்த ஆறுகள் இணைந்து உருவாகும் ஆறு இரப்நாராயண் ஆறு எனப்படுகிறது. இரப்நாராயண் ஆறு ஊக்லி ஆற்றுடன் ஹவுரா மாவட்டத்தில் உள்ள காடியார பகுதியில் இணைகிறது. துவாரகேசுவர் ஆற்றில் நீர் குறைவாக இருக்கும்போது (எந்த பருவத்திலும்) அதிக வண்டல் மண்ணை கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாகக் காணப்படும் வண்டல் மண் படிவதால் நீரோட்டம் தடைப்படுகிறது. ஆரம்பாக் அருகே ஆற்றுப் படுகையில் குப்பை மற்றும் மனித செயல்பாடுகளால் ஆற்றுப்பாதையானது ஒடுக்கப்பட்டுள்ளது[தெளிவுபடுத்துக] நடவடிக்கைகள். திட்டங்கள்துவாரகேசுவர் ஆற்றில் அணை கட்டுவதற்கான திட்டம் ஒன்று உள்ளது. துவாரகேசுவர் காந்தேசுவரி நீர்த்தேக்கம் குறித்த பூர்வாங்க திட்ட அறிக்கை ஜனவரி 2004இல் மத்திய நீர் ஆணையத்தால் தயாரிப்பதற்கான "கொள்கை அடிப்படையில்" ஒப்புதல் மார்ச் 2004இல் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.[2] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia