துவாரக்கு மொழிகள்

துவாரக்கு மொழிகள் (Tuareg languages) என்பன, ஆப்பிரிக்காவில் துவாரக்கு பெர்பர்களால் பேசப்படுகின்ற நெருக்கமான உறவுடைய மொழிகளும், கிளைமொழிகளும் சேர்ந்த ஒரு மொழிக்குடும்ப மொழிகள் ஆகும். இவை மாலி, நைகர், அல்ஜீரியா, லிபியா, மொரோக்கோ, புர்க்கினா பாசோ ஆகிய நாடுகளின் பெரும் பகுதியிலும், சாட் நாட்டில் சிறு தொகை கின்னின் மக்களாலும் பேசப்படுகிறது.[1]

விளக்கம்

துவாரக்குக் கிளைமொழிகள் தென் பெர்பர் குழுவைச் சேர்ந்தவை. இவற்றைச் சிலர் ஒரே மொழியாகவே கொள்கின்றனர். இவற்றைச் சில ஒலி மாற்றங்களினாலேயே வேறுபடுத்திக் காண்கின்றனர். குறிப்பாக z, h ஆகியவற்றின் ஒலிப்பு வேறுபாடுகளைக் குறிப்பிடலாம். துவாரெக் மொழிகள் சில அம்சங்களில் பழமையைக் கடைப்பிடிப்பவை. இவை இரண்டு குறில் உயிர்களைத் தக்கவைத்துள்ளன. ஆனால், வட பெர்பர் மொழிகளில் ஒன்று இருக்கலாம், அல்லது ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். அத்துடன், துவாரெக் மொழிகள் பிற பெர்பர் மொழிகளோடு ஒப்பிடும்போது, குறைந்த விகிதத்திலான அரபு மொழிக் கடன் சொற்களையே கொண்டுள்ளன.

இவை மரபு வழியாக திஃபினாக் என்னும் எழுத்து முறையிலேயே எழுதப்படுகின்றன. ஆனாலும், சில பகுதிகளில் அரபு எழுத்துக்களும் பயன்படுகின்றன. அதேவேளை மாலி, நைகர் ஆகிய நாடுகளில் இலத்தீன் எழுத்துக்களை உபயோகப்படுத்தி எழுதப்படுகின்றன.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya