தூபித் திருவிழாஅடுக்குத் தூபி திருவிழா என்பது அடுக்குத் தூபிக்களில் வரலாற்றை பற்றிய முக்கிய நிகழ்வுகளை நினைவுகூறும் மியான்மார் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு வழக்கமான திருவிழா ஆகும்.[1] அடுக்குத் தூபி திருவிழாக்கள் பர்மிய மதக் நாட்குறிப்பேட்டில் குறித்துள்ள தேதிகளில் மூலம் விழா நடத்தப்படுகின்றன மற்றும் பெரும்பாலும் வருடத்தில் பல நேரங்களில் ஒரு சில நாட்களில் நடைபெறுகின்றன. அடுக்குத் தூபி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் பொதுவாக உபோசதா (பெளத்த சப்பாத்) நாட்களோடு இணைந்திருக்காது, ஏனென்றால் அந்த நாட்களில் பக்தர்கள் புத்த மதத்தில் கூறியுள்ளபடி எட்டு அறிவுரைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.[1] அடுக்குத் தூபி திருவிழாக்களின் பெரும்பகுதி உலர் பருவத்தில், தசாங்வோன் மாதம் (நவம்பர்) தொடங்கி தாபாங் (மார்ச்) மாதம் வரை நடைபெறுகிறது.[2] அடுக்குத் தூபி திருவிழாக்கள் இயற்கையோடு ஒன்றிய விவசாய காட்சிகள் (நாட்டுப்புற கண்காட்சிகள்) அல்லது கொண்டாட்டங்கள் போன்று ஒத்திருக்கும் மற்றும் இது பெரும்பாலும் நாட்டுப்ப்புற கிராம வாழ்க்கையையும், அவர்களின் தொண்மையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கும். அடுக்குத் தூபி திருவிழாக்களின் போது பொழுதுபோக்கு அம்சங்களுடன் தற்காலிக வியாபார சந்தைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அங்கு பல வகையான கடைகள அமைத்து உணவுப் பொருட்கள் ஆரம்பித்து அனைத்து வகயான பொருட்களும் விற்கப்படும். இந்த சந்தை அடுக்குத் தூபி விழா நடைபெரும் கோவில் அருகிலே அமைக்கப்படும். முக்கிய அடுக்குத் தூபி திருவிழாக்கள்ஆனந்தா கோவில் திருவிழா
ஆனந்தா கோவில் மியான்மரில் உள்ள பகன்னில் அமைந்துள்ளது. இது ஒரு பெளத்த மதக் கோவிலாகும். இந்தக் கோவில் கி.மு 1105 ஆம் ஆண்டுவாக்கில் பாகன் வம்சாவழியில் வந்த கியான்சித்தா என்ற அரசரால் கட்டப்பட்டது. ஏறக்கிறைய 912 ஆண்டு தொண்மையானது. பகனில் இருக்கும் நான்கு புராதன கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சிவேஜிகன் அடுக்குத் தூபித் திருவிழாசிவேஜிகன் தூபி அல்லது ஷ்வேஜிகன் பாயா என்பது மியான்மரில் உள்ள பாகன் அருகிலுள்ள நியாங்-யூ என்ற இடத்தில் உள்ள ஒரு புத்த கோவிலாகும். இந்தக் கோவில், பர்மிய தூபிகளின் ஒரு முன்மாதிரி, சிறிய கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களால் சூழப்பட்ட மையப்பகுதியில் ஒரு வட்டமான தங்க இலை வடிவ தூண் கொண்டது. கயாகதியோ தூபி திருவிழா(கயாகதோ, மோன் மாநிலம்) [3] - நாதாவ் கியாய்க்டியோ பகொடா அல்லது கியாய்க்டியோ புத்தர் கோயில் ( Kyaiktiyo Pagoda), தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகிறது. இது மியான்மர் நாட்டில், மொன் மாநிலத்தில் அமைந்த சிறு புத்தர் கோயில். ரங்கூனிலிருந்து 210 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இப்பாறைக் கோயில் கடல் மட்டத்துக்கு மேல் 3600அடி உயரத்தில் (1100 மீட்டர்) அமைந்துள்ளது. இப்பாறையின் உயரம் 7.3மீட்டர். கின்புன் என்ற கிராமத்திலிருந்து 16 கி. மீ., தொலைவில் தங்கப் பாறை அமைந்துள்ளது. சவேடகன் அடுக்குத் தூபி திருவிழா(யங்கோன், யங்கோன் பிரதேசம்) - தாபாங் சவேடகன் அடுக்குத் தூபி அதிகாரப்பூர்வமாக சவேடகன் சிதி டாவ் என்றும் சிறந்த டகன் தூபி அல்லது தங்கத் தூபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தூபி மியான்மர், ரங்கூனில் அமைந்துள்ள ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட தூபியாகும். இதன் மொத்த உயரம் 99 மீட்டர் உயரம் (325 அடி). பகோடா சிங்குட்தரா மலையில் அமைந்துள்ளது, கந்தாங்கி ஏரிக்கு மேற்காகவும், யாங்கன் நகர வானில் மிக உயர்ந்த கட்டிடமாக ஆதிக்கம் செலுத்துகிறது. பொததாங் அடுக்குத் தூபித் திருவிழா([யங்கோன்]]) [4] - நதாவ் பொததாங் அடுக்குத் தூபி மியான்மரில் உள்ள யாங்கன் நகரில், ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள பிரபலமான பெளத்த ஆலயம். பொதாதங் என்றும் அழைக்கப்படுகிறது. பொததாங் என்றால் ஆயிரம் வீரர்கள் என்பது பொருளாகும். இந்தத் தூபி 2500 ஆண்டுகளுக்கு முன்னர் மோன் இனத்தவரால் சவேடகன் அடுக்குத் தூபி அமைக்கப்பட்ட அதே காலத்தில் அமைக்கப்பட்டது. இன்னும் பிறத் திருவிழாக்கள்
மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia