தூல் ஆறு
தூல் ஆறு அல்லது துலா ஆறு (மொங்கோலியம்: Туул гол, சீனம்: 土拉河; பின்யின்: Tǔlā Hé) மத்திய மற்றும் வடக்கு மங்கோலியாவில் ஒரு ஆறு ஆகும். இது மங்கோலியர்களுக்கு புனிதமானதாகும். தூல் பொதுவாக மங்கோலிய மொழியில் கதான் (ராணி) தூல் என்று அழைக்கப்படுகிறது. இது 704 கிலோமீட்டர் (437 மைல்) நீளம் கொண்டது. இதன் வடிநிலத்தின் பரப்பளவு 49,840 சதுர கிலோ மீட்டர் (19,240 சதுர மைல்) ஆகும். சுயி அரசமரபின் அரசாங்க வரலாற்றுப் புத்தகத்தில் (கி.பி. 636) இது "துலுவோ ஆறு" என்றழைக்கப்படுகிறது. மங்கோலியர்களின் இரகசிய வரலாறு (கி.பி. 1240) அடிக்கடி "தூல் ஆற்றின் கருப்பு காடு" பற்றிக் குறிப்பிடுகிறது. இங்கு தான் வாங் கானின் அரண்மனை அமைந்திருந்தது. சீனாவில் இருந்து மங்கோலியப் பேரரசின் நீக்கம் மூலம் மிங் வம்சம் (கி.பி. 1368 - கி.பி. 1644) நிறுவப்பட்டது. பெய்ஜிங்கைக் கைப்பற்றிய பின், மிங் வம்சத்தை நிறுவிய கோங்வு பேரரசர் கி.பி. 1372ல் துலா ஆற்றில் மங்கோலியர்களைத் தோற்கடித்து அவர்களை ஒர்கோன் நதிக்கு திரும்பிச்செல்ல வைத்தார். கி.பி. 1414ல் மீண்டும் துலா ஆற்றில் ஒயிரடுகளைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் கோங்வு பேரரசருக்கு ஏற்பட்டது.[1] கென்டீ மலைகளில் உள்ள கான்-கென்டேயின்-நுரூ இயற்கைப் பகுதியில் இந்த ஆறு உருவாகிறது. இப்பகுதி தோவ் ஐமக்கில் உள்ள எர்தின் மாவட்டத்தில் உள்ளது. [2] அங்கிருந்து தென்மேற்கில் பயணம் செய்யும் இந்த ஆறு உலான் பத்தூர் எல்லையை அடைகிறது. இதன் நீர் தலைநகரின் தெற்குப் பகுதி வழியே செல்கிறது. பெரிய சுழல்களாக மேற்குத் திசையிலே பயணிக்கிறது. புல்கன் ஐமக்கின் எல்லையைச் சந்திக்கும் போது வடக்கே திரும்புகிறது. அந்த எல்லையில் ஓடுகிறது. செலெங்கே ஐமக்கிற்குள் நுழைகிறது. ஒர்கோந்தூல் மாவட்டத்தின் மையப்பகுதியில் ஒர்கோன் ஆற்றில் கலக்கிறது. [3] ஒர்கோன் ஆறு செலெங்கே ஆற்றில் கலக்கிறது. செலெங்கே ஆறு உருசியாவுக்குள் நுழைந்து பைக்கால் ஏரியில் கலக்கிறது. தூல் ஆறு மேலும் குசதைன் நுரூ தேசிய பூங்கா பக்கத்தில் பாய்கிறது. இது நவம்பர் நடுப்பகுதியில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை பொதுவாக உறைந்து காணப்படுகிறது. தூல் ஆற்றின் அருகில் வில்லோ காடுகள் வளருகின்றன. இந்த ஆறு அருகிய இனமான ஸ்டர்ஜன் மீன்களின் இருப்பிடமாக உள்ளது. [4] தற்போது இந்த ஆறு மாசுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. உலான் பத்தூரின் மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சாமர் பகுதியில் தங்க சுரங்கத்தால் ஏற்படும் கனரக கனிம மற்றும் வண்டல் மாசுபாடு ஆகியவற்றால் இது பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆற்றின் அருகே குடியேறும் மக்களின் தொடர் குடியேற்றமானது நீரின் தரம் சீரழியக் காரணமாக இருக்கலாம். விவரிப்புகள்மங்கோலியாவிற்குப் பல முறை பயணம் செய்த பிரஞ்சு மத போதகர் சீன்-ஃபிரான்கோயிசு கெர்பில்லன், ஆகத்து 3, 1698 தேதியிட்ட அவரது பத்திரிகை இடுகையில் இந்த ஆற்றைப் பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார்:
மான்சியர் டி போர்போவுலோன் (பிரான்சு மந்திரி) கி.பி. 1860ல் இந்த ஆற்றிற்கு விஜயம் செய்தார்:
ஒர்கோன் கல்வெட்டுகள், ஒகுஸ் துருக்கியர்கள் தூல் ஆற்றுக்குப் பக்கவாட்டில் தாதர்களுடன் வசித்து வந்தார்கள் என்று கூறுகின்றன. ஒகுஸ் துருக்கியர்கள் இந்த இடத்திலிருந்து 8ம் நூற்றாண்டில் மேற்குப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். வெளி இணைப்புகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia