தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன்
தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் (Thechikottukavu Ramachandran)(பிறப்பு c. 1964 ) கேரளாவில் உள்ள தெச்சிகோட்டுக்காவு தேவசோமுக்கு சொந்தமான கோயில் யானை ஆகும்.[1] இது 316 செ.மீ. உயரமுடையது. இந்தியாவில் உயரமான உயிருடன் உள்ள யானையும் ஆசியாவில் இரண்டாவது உயரமான யானை இதுவாகும்.[2] ராமச்சந்திரன் யானை பிரியர்களிடையே ராமன் என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. மேலும் கேரளா முழுவதும் பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ள யானையாகும். ராமச்சந்திரனுக்கு அவரது ரசிகர்களால் ஏகாத்திரதிபதி (ஒரே ஒரு பேரரசர்) என்ற பெயரும் வழங்கப்படுகிறது.[3] பகுதி பார்வையற்ற இந்த யானை பல பூரம் பண்டிகைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பொது காட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது.[4][5] ஒரு திருவிழாவின் போது யானையை ஒன்றைக் கொன்றதற்காகவும் அறியப்படுகிறது.[6] சம்பவங்கள்இந்த யானையின் வாழ்நாளில், 13 பேரைக் கொன்றுள்ளது.[7] 1982இல் கேரளாவுக்கு அழைத்து வரப்பட இந்த யானையினை 1984ஆம் ஆண்டில் தெச்சிகோட்டுக்காவு தேவஸ்தானம் வாங்கியது. திருச்சூர் பூரத்தில் பங்குதிருச்சூர் பூரம் என்பது அனைத்து பூரங்களில் (கோவில் திருவிழாக்கள்) மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமானதாகும். 2011முதல், திரிச்சூர் பூரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பூரா விலம்பரம் நிகழ்வினை ராமசந்திரன் செய்கிறது. பூரா விலம்பரம் என்பது திரிச்சூர் பூரத்தை நடத்தும் வடக்குநாதன் கோயிலின் தெற்கு நுழைவாயிலைத் திறக்க யானை தள்ளும் வழக்கம். அதன் மேல் 'நெய்திலக்கவிலம்மா' சிலை இருக்கும். 2019ல் ராமச்சந்திரன் இருவரை மிதித்த சம்பவத்திற்குப் பிறகு, மருத்துவ வல்லுநர்கள் குழு மருத்துவ ரீதியாக இந்த யானைத் தகுதியற்றது என்று அறிவித்ததை அடுத்து, கோயில் விழாக்களில் இந்த அணிவகுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. புகழ்பெற்ற இந்த யானைக்கு மே 11 அன்று நிபந்தனை வழங்கப்பட்டது. புகழ்பெற்ற திருச்சூர் பூரத்தில் பங்கேற்க விலங்கு உடற்பயிற்சி பரிசோதனையை முடித்த பின்னர். மூன்று கால்நடை மருத்துவர்கள் குழு யானைக்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டதை அடுத்து அரசுக்கு அனுமதி வழங்கியது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia