தெனிசு தெனிசெங்கோ
தெனிசு விளாதிமீரொவிச் தெனிசென்கோ (Denis Denisenko, உருசியம்: Денис Владимирович Денисенко, பிறப்பு: 16 சனவரி 1971) ஓர் உருசிய வானியளாளர். இவர் 7 மீவிண்மீன் வெடிப்புகளையும் 50 க்கும் மேற்பட்ட மாறும் விண்மின்களையும் ஒரு சிறுகோளையும் ஒரு வால்வெள்ளியையும் கண்டறிந்தார். வாழ்க்கைதெனிசெங்கோ 1971 இல் மாஸ்கோவில் பிறந்தார். இவர் 1993 இல் மாஸ்கோ அறிவ்யல், தொழில்நுட்ப நிறுவனத்தில் வானியற்பியலில் மூதறிவியல் பட்டமும் காமாக்கதிரின் கதிர்நிரல் இயல்புகளில் பட்டயமும் பெற்றார். இவர்கிரனாத் வான்காணக ஃபீபசு (PHEBUS) கருவியால் காமாக்கதிராய்வு செய்தார்.இவர் 1991 இலேயே உருசிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் உயராற்றல் வானியற்பியல் துறையில் சேர்ந்தார். அங்கு 2012 வரை பணிபுரிந்தார். இவர் 2002 முதல் 2007 வரை துபிதாக் தேசிய வான்காணக வருகைதரு நோக்கீட்டாளரக விளங்கினார். பிறகு 2012 மே மாத்த்தில் இருந்து மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் சுடென்பர்கு வானியல் நிறுவனத்தில் விண்வெளி கண்காணிப்பு ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.இவர் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 250 வானியல் தொலைவரிகளை அனுப்பியுள்ளார். பல பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் 1977 முதலாகவே பயில்நிலை வானியலாளராக இருந்துள்ளார். 2002 இல் இருந்து மாஸ்கோ வானியல் குழுமத்தின் உறுப்பினர் ஆவார். மேலும் சிறுகோள்களின் ஒளிமறைப்புப் பனிக்குழுவின் தலைவரும் ஆவார்.இவர் வான்விழாக்களில் 2001 முதல் 2006 வரையிலும் 2013 இலும் கலந்து கொண்டார். மேலும்இவர் முனைவுமிக்க பயில்நிலை தொழில்முரை வானியல் ஆர்வலர். நெடுங்காலமாக இவர் IOTAoccultations, Planoccult, meteorobs, comets-ml, MPML, SeeSat, AAVSO-HEN, AAVSO-DIS, vsnet-விழிப்புறுத்தல், vsnet-வெடிப்புகள், cvnet-விவாத மின்னஞ்சல் வரிசைகள் ஆகிய அமைப்புகளில் பங்கேற்று வருகிறார். இவர் கொம்யேதி, பொரியூதி, மாஸ்கோ-வாணி, மாறுமீன்கள் ஆகிய ஐந்து மின்னஞ்சல் வரிசைகளின் உரிமையாளரும் நடுநிலையாளரும் ஆவார். ’புவியும் புடவியும்’ எனும் உருசிய இதழில் பல மக்கள் அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இருமுறை ’வானும் தொலைநோக்கியும்’ நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் ’உருசிய விடுதலை’ வானொலி எனும் வானொலி சேவையிலும் ’கசேதா.உரு’ எனும் செய்தித்தாளிலும் பிரித்தானிய ஒலிபரப்பின் உருசியச் சேவையிலும் 2007 இல் நேர்காணல்கள் தந்துள்ளார். முதன்மைக் கண்டுபிடிப்புகள்
மற்ற தகைமைகள்
மேற்கோள்கள்
இலக்கியப் பணிகள் (உருசிய மொழியில்)
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia