தெமெ![]() ![]() பண்டைய கிரேக்கத்தில், தெமெ (demos, பண்டைக் கிரேக்கம்: δῆμος δῆμος , பன்மை: டெமோய், δημοι) என்பது ஏதென்சு மற்றும் பிற நகர அரசுகளின் புறநகர் அல்லது துணை நிர்வாகப் பிரிவாகும். கிராமப்புற நிலப்பகுதிகளை உட்பிரிவுகளாக கொண்ட தெமெக்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முந்தைய காலத்திலும் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் கிமு 508 இல் கிளீசுத்தனசின் அரசியல் சீர்திருத்தங்கள் வரை இவை குறிப்பிடக்கூடியதான முக்கியத்துவத்தைப் பெறவில்லை. அந்த சீர்திருத்தங்களினால், தெமெவில் நிரந்தரமாக வசிப்பவர்கள், அவர்களின் சந்ததியினருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு பூலி என்னும் மக்கள் அவையின் உறுப்பினர்களாக ஆயினர். அதற்கு முன், ஏதென்சில் குடியுரிமை என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது குடும்பக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கிளீசுதனசின் சீர்திருத்தங்களின் முடிவில், ஏதென்சு 139 தெமெக்களாக பிரிக்கப்பட்டது [1] அதில் பெரெனிகிடாய் (கிமு 224/223 இல் நிறுவப்பட்டது), அப்பல்லோனிஸ் (கிமு 201/200) மற்றும் ஆன்டினோயிஸ் (126 இல் சேர்க்கப்பட்டது) /127) ஆகியவை அடங்கி இருந்தன. அரசின் அடிப்படை நிர்வாக அலகுகளாக தெமெக்கள் ஆக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே பூலிக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதுவரை அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரபுத்துவ குடும்பக் குழுக்களின் ஆதிக்கத்தை இது பலவீனப்படுத்தியது. [2] ஒரு தெமெ இன்றைய தாலுக்காக்கள் போல ஓரளவு செயல்பட்டது. உண்மையில் எலியூசிஸ் மற்றும் அச்சார்னே போன்ற சில தெமெக்கள் உண்மையில் குறிப்பிடத்தக்க அளவில் நகரங்களாக இருந்தன. ஒவ்வொரு தெமெவிலும் அதன் விவகாரங்களை மேற்பார்வையிடும் டெமார்ச்சஸ் என்னும் நிர்வாக அதிகாரி இருந்தார். பல்வேறு குடிமை, சமயம, இராணுவ அதிகாரிகள் பல்வேறு தெமெக்களில் இருந்தனர். தெமெக்கள் அவர்களின் சொந்த சமய விழாக்களை நடத்தி வருமானத்தை சேகரித்து செலவு செய்தன. [3] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia