தெறி (திரைப்படம்)
தெறி (Theri) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர்.[3] அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரித்தார்.[4] இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார்.[5] இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் நடிகை சமந்தா தனது சொந்தக்குரலிலேயே வசனம் பேசியுள்ளார். [6] நடிகர்கள்
பாடல்கள்பாடல்களுக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
வெளியீடுஇப்படம் 14 ஏப்ரல் 2016 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் 350 திரைகள், கேரளாவில் 200 திரைகள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 150 திரைகள், மற்றும் கர்நாடகாவில் 70 திரைகள் என உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. மேலும், வெளிநாட்டு மையங்களில் 400 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. யுனைடெட் ஸ்டேட்ஸ் முழுவதும் 144 திரைகளுடன். அமெரிக்காவில் படத்தை விநியோகித்த CineGalaxy Inc, இது "சமீபத்திய ஆண்டுகளில் விஜய்-படத்தின் மிகப்பெரிய வெளியீடு" என்று கூறியது. தயாரிப்புஇத்திரைப்படத்தை கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்துள்ளார்.. மேற்கோள்கள்
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :தெறி (திரைப்படம்)
|
Portal di Ensiklopedia Dunia