தெற்கு தினஜ்பூர் மாவட்டம்
![]() தெற்கு தினஜ்பூர் (Dakshin Dinajpur அல்லது South Dinajpur, வங்காள மொழி: দক্ষিণ দিনাজপুর জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பாலூர்காட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம் இது ஆகும். இங்கு இந்து மற்றும் இஸ்லாம் இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் வங்காள மொழி பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் விவசாயம் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,219 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மக்கட்தொகை2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 16,70,931 ஆகும்.[2] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 753 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 11.16% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 73.86% ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia