தெற்கு பொய்கைநல்லூர் சொர்ணபுரீசுவரர் கோயில்

தெற்கு பொய்கைநல்லூர் சொர்ணபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பரவை என்னுமிடத்திற்கு அருகில் உள்ள தெற்கு பொய்கைநல்லூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக சொர்ணபுரீசுவரர் உள்ளார். இறைவி பெரியநாயகி ஆவார்.[2]

அமைப்பு

வள்ளி தெய்வானையுடன் முருகன், விநாயகர் மற்றும் காவல் தெய்வம் செல்லியம்மன் ஆகியோர் இக்கோயிலில் உள்ளனர். இலுப்ப மரக் காடாக இருந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சிலைகள் கிடைத்தன. அருகில் ஒரு அம்மன் சிலையும் கிடைத்துள்ளது. அவற்றை வைத்து கோயில் கட்டியுள்ளனர்.[2]

அமைப்பு

காட்டுப்பகுதியில் இக்கோயில் உள்ளதால் அம்மனுக்குக் காவலாக நாகம் இருப்பதாக நம்புகின்றனர். அம்மன் கோயில் கதவுக்கு முன் புறத்தில் நாகம் படுத்திருப்பதாகவும், கோயிலின் பூசாரி கோயில் கதவைத் திறக்கும்போது, மணியொலியைக் கேட்டு நாகம் மறைந்துவிடுவதாகவும் கூறுகின்றனர். [1]

திருவிழாக்கள்

வைகாசி விசாகத்தின்போது தீ மிதி விழாவும், சிவராத்திரியின்போது சுவாமி புறப்பாடும் இக்கோயிலில் நடைபெறுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தினகரன்". Archived from the original on 2015-06-09. Retrieved 2017-01-15.
  2. 2.0 2.1 2.2 அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya