தேக்கடி
![]() தேக்கடி கேரளத்தின் பெரியாறு தேசியப் பூங்காவின் ஒரு பகுதி. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இவ்வூர் ஒரு குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதி. இது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஊரான குமுளிக்கு அருகில் உள்ளது. பசுமைமாறாக் காடுகளுக்காகவும் சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் தேக்கடி புகழ் பெற்றது. இப்பகுதியில் யானைகள், புலிகள், சோலை மந்திகள் முதலான பல காட்டுயிர்கள் வாழ்கின்றன. பூங்காதேக்கடி படகுத்துறைக்குள் செல்வதற்கு முன்புள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளின் மேல் புலி நிற்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் சுற்றுப்பகுதியில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. படகுப் பயணம்கேரள அரசின் வனத்துறையின் கீழுள்ளப் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரிப் பகுதியில் படகுப் பயணம் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரப் படகுச்சவாரி மூலம் ஏரிப்பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் யானை, மான், காட்டெருமை போன்ற மிருகங்களைப் படகிலிருந்து பார்த்து மகிழ முடியும். படகு விபத்தும் பாதுகாப்பும்தேக்கடியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30ல் கேரள அரசின் வனத்துறைக்குச் சொந்தமான ஜலகன்னிகா எனும் பெயரிடப்பட்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி மைதீன் குஞ்சு தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.[1] இந்தக் குழு விசாரணைக்குப் பின் அரசிடம் அளித்த விசாரணை அறிக்கைக்குப் பின்பு, தேக்கடியில் படகுப் பயணத்திற்குப் பல பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன.
- என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் பாதுகாப்பிற்காகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia