தேங்காப்பட்டினம்

தேங்காப்பட்டினம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.நாகர்கோவிலிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் குழித்துறையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.இங்கு தென்னைமரங்கள் அதிகம் பயிரிடப்படுவதால் இப்பெயர் பெற்றது.-தேங்காய்பட்டினம்-.ஆயி குல மன்னர்கள் ஆண்ட தேங்கா நாட்டின் மையப் பகுதியில் அமைந்த இடமானதால் இப் பெயர் எனவும் கூறப்படுகிறது.பண்டை நாட்களிலிருந்தே அரேபியா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொப்பரைத் தேங்காய்,உலர்ந்த மீன், கயிறு முதலியன முக்கிய ஏற்றறுமதிப் பொருட்களாகும். அன்றே முகமதிய வணிகர்கள் அரசரின் ஒப்புதலுடன் இவ்விடத்தினை தங்கள் வாழ்விடமாகவும் கொண்டனர்.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மசூதி கட்டியுள்ளனர். சுமார் 16 கிலோமீட்டர் நீளத்திற்கு ஏ.வி.எம்.கால்வாய் உள்ளது. படகு போக்கு வரத்திற்கு ஏற்றது.

இந்திய விவரச் சுவடி.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya