தேசம்

தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.[1] ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகள் பல நாடுகளாக பிரிந்தும் காணப்படுகின்றன.[2][3]

தமிழ் மரபும் உலக மரபும்

பழந்தமிழகத்தின் 12 மொழிப்பெயர் தேயங்கள்

பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச் சொல்லப்படுகிறது.[கு 1] அதன்படி வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்த்தேசம் என வரையறுக்கப்பட்டது.[கு 2] வேங்கடத்துக்கு வடக்கில் வேற்று மொழியாளர்களான வடுகர்கள் வாழும் வடுகர் தேயம் என்னும் மொழி பெயர்ந்த தேயம் வருவதாக கூறப்படுகிறது.[கு 3][கு 4]

குறிப்புகள்

  1. இந்தியா
  2. கொரிய மொழி தேசம் தென்கொரியா என்றும் வடகொரியா என்றும் தற்போது வரை (2015) பிரிந்துள்ளமை.
  3. தமிழ்த்தேசியம் என்றால் என்ன?, இராசேந்திரச் சோழன்

மேற்கோள்கள்

  1. "தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே" (அகம். 31:14-15)
  2. வடவேங்கடம் தென்குமரி அவ்இடை தமிழ் கூறும் நல்லுலகு
  3. "குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே" (குறுந்தொகை 11::5-8)
  4. "பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்" (அகம்.211:7-8)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya