தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், புதுடில்லி.
தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் (National University of Educational Planning and Administration) தெற்கு புதுதில்லியில் உள்ள 17-பி, அரபிந்தோ மார்க் சாலையில் அமைந்துள்ளது[1] . இது பள்ளிக் கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான ஒரே பல்கலைக் கழகமாகும். இப்பல்கலைக் கழகம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகிறது.[2][3][4]. வரலாறுதேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகமானது, முதன்முதலில் 1962ஆம் ஆண்டு யுனெஸ்கோவிற்குரிய கல்வி திட்டமிடுபவர்கள், நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆசிய மையமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1965ல் இது ஆசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனமாக உருவானது. அதன்பின் அந்நிறுவனம் 1973ல் கல்வி திட்டமிடுபவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான தேசிய கல்லூரியாகக் மாறியது. பின்னர் மீண்டும் 1979ல் 'தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக 2006 ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டு தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகமாக செயற்படத் தொடங்கியது[5][6]. ஆட்சிக் குழு
துறைகள்இந்தப் பல்கலைக்கழகமானது எட்டு கல்விசார் துறைகளையும், சிறந்த மேலாண்மைக்கான இரண்டு மையங்களையும் கொண்டுள்ளது. அவை:
பாடப் பிரிவுகள்
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia