தேசிய கல்வி தினம் (இந்தியா)தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.[1][2][3] 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் இந்திய நடுவண் அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (தற்போதைய கல்வித்துறை) மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய கல்வி நாளாக அறிவித்தது. இந்த நாளில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கருத்தரங்கள், கட்டுரைப் போட்டிகள், கல்வி சார் நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், கல்வி சார் பணிமனைகள், பேரணிகள் நிகழ்த்தி இந்நாளினைக் கொண்டாடலாம். இதன் மூலம் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மற்றோருக்கு உணர்த்தலாம். இந்த நாளாளது சுயசார்பு கொண்ட இந்தியாவிற்கான இந்தியக் கல்வி முறைக்கு அடித்தளமிட்ட ஆசாத்தின் பங்களிப்புகளை நினைவுகூருவதற்கும் உகந்த தருணமாகப் பார்க்கப்படுகிறது.[4] மேற்கோள்கள்
. |
Portal di Ensiklopedia Dunia