தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம்
தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம் (National Sanskrit University) என்பது முன்பு இராஷ்ட்ரிய சமசுகிருத வித்யாபீடம் என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகமாகும்.[2][3] வரலாறுசமசுகிருத ஆய்வுகள், பாரம்பரிய சாத்திரங்கள் மற்றும் கல்வியியல் ஆகியவற்றைப் பரப்புவதற்காக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் 1956-ல் பள்ளியாக நிறுவப்பட்டது. தற்பொழுது இப்பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் முதல் தரச் சான்று பெற்றுள்ளது. பாரம்பரிய சாஸ்திரங்களில் அதன் சாதனைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனைக் கருத்தில் கொண்டு, 1989ஆம் ஆண்டு பத்தாண்டு திட்டக் காலத்தில், பாரம்பரிய சாத்திரங்களில் சிறந்து விளங்கும் மையம் என்ற தகுதி இப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. மார்ச் 2020-ல், மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருதம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களுடன், மத்தியப் பல்கலைக்கழகமாக ராசுட்ரிய சம்சுகிருத வித்யாபீடத்தை தேசிய சமசுகிருத பல்கலைக்கழகமாக மேம்படுத்துவதற்கான மத்திய சமசுகிருத பல்கலைக்கழக சட்டம், 2020 இந்திய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.[4] பொதுப் படிப்பு1. பட்டப் படிப்பு
2. முதுகலை படிப்புகள்
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதுமையான திட்டங்களின் கீழ்
3. ஆராய்ச்சி திட்டங்கள்
4. தொழில்முறை படிப்புகள்
மாலை மற்றும் பகுதி நேர படிப்பு1. பட்டப் படிப்பிற்கு பிந்தைய படிப்புகள்
2. பட்டயப் படிப்புகள்
3. சான்றிதழ் படிப்புகள்
4. கூடுதல் படிப்புகள்பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் வித்யாபீடம் பின்வரும் தொழில் சார்ந்த படிப்புகளைக் கூடுதல் படிப்புகளாக வழங்குகிறது.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia