தேசிய சுதந்திர முன்னணி
தேசிய சுதந்திர முன்னணி (National Freedom Front, NFF அல்லது Jathika Nidahas Peramuna (JNP)) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதன் தலைவரான விமல் வீரவன்ச என்பவரால் நிறுவப்பட்டது. இதன் அரசியல் நடவடிக்கைகள் 2008, மே 14 ஆம் நாள் ஆரம்பமாயின.[1] வரலாறுஜேவிபி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி 1965 ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த ரோகண விஜேவீரவினால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சி 1971 ஆம் ஆண்டில் அன்றைய ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சி அரசுக்கு எதிராகவும், 1988-1989 காலப்பகுதியில் அன்றைய ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு எதிராகவும் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1989 ஆம் ஆண்டில் அதன் தலைவர் ரோகண விஜேவீர கொல்லப்பட்டதும், சனநாயக அரசியலில் ஈடுபட்டு 1994 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றியது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அதன் தலைவர் விமல் வீரவன்ச 2008 மார்ச் 21 இல் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும், அதன் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.[2][3] இதனை அடுத்து 2008 மே 14 இல் தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia