தேசிய விலங்கு நல நிறுவனம்தேசிய விலங்கு நல நிறுவனம் (National Institute of Animal Welfare) என்பது இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் துணை நிறுவனமாகும். 1999 ஜனவரி 16 ஆம் தேதி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற நிதி நிலைக் குழுவின் முடிவின்படி பல்லப்கரில் (அரியானா) தேசிய விலங்கு நல நிறுவனம் நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் இந்நிறுவனம் அரியானாவின் பல்லப்கார்ப் நகரில் அமைந்துள்ளது.[1][2] இந்நிறுவனத்திற்காகக் கிராம பஞ்சாயத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அரியானா மாநிலத்தின் பரீதாபாத் மாவட்டத்தில் இந்நிறுவனத்தினை நிறுவ மாவட்ட காதி மற்றும் பரிதாபத்தின் கிராம தொழில் அலுவலர் நரேஷ் கடியான் பங்கு முக்கியமானது. வரலாறு16 ஜனவரி 1999 அன்று நடைபெற்ற நிதி நிலைக் குழுவின் கூட்டத்தில் இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.[3] தேசிய விலங்குகள் நல நிறுவனத்திற்கான கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (எட்.சி.ஐ.எல்)க்குச் செயல்படுத்தும் பணியைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.[2] குறிக்கோள்கள்
வளாகம்தேசிய விலங்கு நல நிறுவனம் 8-ஏக்கர் பரப்பில் அரியானாவின் பல்லப்கார்ப் பகுதியில் அமைந்துள்ளது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia