தேஜேந்திர மசூம்தார்
பண்டிட் தேஜேந்திர நாராயண் மசூம்தார் (ejendra Narayan Majumdar ) (பிறப்பு 17 மே 1961) ஒரு இந்தியாவைச் சேர்ந்த சரோத் கலைஞராவார். இவர் பகதூர் கானின் மாணவர். பயிற்சிஇவர் தனது தாத்தா பிபூதி ரஞ்சன் மசூம்தரின் கீழ் மாண்டலின் மூலம் தனது இசை பயிற்சியைத் தொடங்கினார். அமரேசு சௌத்ரி மற்றும் அனில் பாலித் ஆகியோரின் கீழ் குரல் மற்றும் கைம்முரசு இணை பயிற்சியையும் பெற்றார். [1] பின்னர் பகதூர் கானின் கீழ் 18 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் அஜய் சின்கா ராய் மற்றும் அலி அக்பர் கான் ஆகியோரின் கீழ் தொடர்ந்து பயிற்சி பெற்றார். ![]() இணைஇவர் சுஜாத் கானுடன் இணைந்து பாடியுள்ளார். குறிப்பாக சாருகேசி இராகத்தை பாடுவது குறிப்பிடத்தக்கது. [2] இசை இயக்கம்அர்ச்சுன் சக்ரவர்த்தி இயக்கிய டோலிலைட்ஸ் என்ற பெங்காலி திரைப்படத்திற்கு,[3] 2010 ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு வங்காள திரைப்படமான ஹனங்கால் படத்திற்கும் இசையமைத்துள்ளார். [4] விருதுகள்1981 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலி நடத்திய இசை போட்டியில் முதலிடம் பிடித்த இவருக்கு குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கமும் பண்டிட் த. வி. பலூசுகர் விருதும் வழங்கப்பட்டது.[5] சொந்த வாழ்க்கைஇவர் மானசி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இந்திரயுத் என்ற ஒரு மகன் இருக்கிறான். [6] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia