தேவகோட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தேவகோட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். அமைவிடம்இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 74 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°56'48.2"N, 78°49'36.4"E (அதாவது, 9.946710°N, 78.826782°E) ஆகும். இறைவன், இறைவிஇக்கோயிலின் மூலவராக சுந்தரேசுவரர் உள்ளார். இறைவி மீனாட்சி ஆவார். சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இக்கோயிலை சேக்கிழார் கோயில் என்றும் அழைக்கின்றனர். வைகாசி பூச நட்சத்திரத்தில் சேக்கிழார் குரு பூசையும், ஆராதனையும் நடைபெறுகிறது.[1] அமைப்புஇரு ராஜகோபுரங்களைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயிலில் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் தனித்தனியாகக் காணப்படுகின்றனர். கோயிலின் உள் திருச்சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசாலாட்சி, பால தண்டாயுதபாணி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர், சண்டிகேசுவரி, நடராஜர், நவக்கிரகங்கள், கன்னிமூலை விநாயகர் ஆகியோர் உள்ளனர்.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia