தேவதாரம்தேவதாரம் (தாவர வகைப்பாட்டியல்: Cedrus deodara[1]) என்னும் இத்தாவரத்திற்கு தேவதாரம் தூண், இருதாரு, தாரு, தாரம், பத்திரதாரூகம், தேவதாரர்மரம் தேவதாடு என்று வேறு பெயர்களும் உண்டு.[2][3][4] பண்புகள்இதன் பட்டை, கட்டை இரண்டும் மருத்துவ குணம் கொண்டவை. பட்டை துவர்ப்பு சுவையும், கட்டை சிறு கைப்புச் சுவையுடனும் உள்ளது. வெப்பத்தன்மை உடையது. மருத்துவ குணம்பீநிசம், பழையசுரம், நீரேற்றம், உடல்வெப்பம் நீக்கும். மேலும் இருமல், பல்வலி, இரைப்பு, வலி, காதிரைச்சல், நடுக்குவாயு, சுரம் இவற்றிற்கு இதன் பட்டை மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் இப்பட்டையின் தூள் புண்களை குணமாக்கும். கட்டையைப் பால் விட்டு உரைத்துக் கொதிக்க வைத்துத் தலையில் தடவ தூக்கமின்மை, மயக்கம், கிறுகிறுப்பு ஆகியவை நீங்கும். இதனைப் பொடியோடு சுக்கு, பொட்டிலுப்புச் சேர்த்து நீர் விட்டுக் குழைத்து வீக்கங்களுக்கு இட வீக்கம் குணமாகும். துணை நூல்மூலிகைக் களஞ்சியம் - திருமலை நடராசன் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia