தேவதூத் பாடிக்கல்
தேவதூத் பாடிக்கல் (Devdutt Padikkal பிறப்பு: 7 சூலை 2000) ஓர் இந்திய முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் கருநாடக துடுப்பாட்ட அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடுகிறார்.[1][2][3] ஆரம்ப கால வாழ்க்கைபாடிக்கல் எடப்பல் கேரளாவில் பிறந்தார், இவருடைய குடும்பம் 2011 ஆம் ஆண்டில் ஜதராபாத்துக்கும் அங்கிருந்து பெங்களூருக்கும் குடிபெயர்ந்தது. அங்கு கருநாடக துடுப்பாட்ட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியைத் தொடங்கினார். 2014 முதல் 16 வயதிற்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் கருநாடக துடுப்பாட்ட அணியில் விளையாடினார்.[4] உள்நாட்டுத் துடுப்பாட்டம்28 நவம்பர் 2018 அன்று 2018–19 ரஞ்சி கோப்பையில் கருநாடக அணியில் தனது முதல் தரத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடினார்.[5] 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இவரை ஏலத்திலில் எடுத்தது அப்போது முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.[6][7] ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் நான்கு போட்டிகளில் மூன்று அரைசதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[8] 2021 இல் ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக தன் முதல் சதத்தை பெற்றார் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia