தைட்டானியம்(III) குளோரைடு
தைட்டானியம் (III) குளோரைடு (Titanium(III) chloride) என்பது TiCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கூடிய கனிமச் சேர்மம் ஆகும். குறைந்தது நான்கு தனித்துவமான மூலக்கூறுகள் இதே வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன; கூடுதலாக நீரேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்கள் அறியப்பட்டுள்ளன. TiCl 3 என்பது தைட்டானியத்தின் மிகவும் பொதுவான ஆலைடுகளில் ஒன்றாகும் மற்றும் இது பாலிஒலீஃபின்களை உற்பத்தி செய்வதற்கான முக்கியமான வினையூக்கியாகும். கட்டமைப்பு மற்றும் பிணைப்புTiCl3 இல் ஒவ்வொரு Ti அணுவிலும் ஒரு d எலக்ட்ரான் உள்ளது, இந்த எலக்ட்ரான் அதன் வழிப்பொருள்களை பாராகாந்தமாக ஆக்குகிறது, அதாவது காந்தப்புலத்தில் ஈர்க்கப்படும் பொருளாக மாற்றுகிறது. தைட்டானியம் (III) குளோரைடின் கரைசல்கள் டி-எலக்ட்ரானின் கிளர்ச்சியின் காரணமாக கருஊதா நிறத்தைக் கொண்டுள்ளது.லாப்போர்ட் தேர்வு விதியால் ஆற்றல் மட்டங்களக்கிடையேயான மாற்றம் தடைசெய்யப்பட்டிருப்பதால் நிறம் மிகவும் அடர்ந்ததாக இல்லை. தொகுப்பு முறை மற்றும் வினைத்திறன்TiCl 3 பொதுவாக தைட்டானியம் டெட்ராகுளோரைடைக் குறைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பழைய குறைப்பு வினைகள் ஐதரசனைப் பயன்படுத்தின:[1]
இது அலுமினியத்துடன் எளிதில் குறைக்கப்பட்டு அலுமினியம் குளோரைடு உடன் கலவையாக,(TiCl3·AlCl 3) விற்கப்படுகிறது. இந்த கலவையை TiCl3(THF )3 ஐ விளைவிப்பதற்கு பிரிக்க முடியும்.[2] இந்த அணைவானது ஒரு நெடுந்தொடர் கட்டமைப்பை ஏற்கிறது.[3] இதன் ஐதரேட்டானது தைட்டானியத்தை ஐதரோகுளோரிக் நீர்க்கரைசலில் கரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
TiCl3 பலவிதமான அணைவுச்சேர்மங்களை உருவாக்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை எண்முகி வடிவத்தைப் பெற்றுள்ளன.TiCl3 ஆனது டெட்ராஐதரோபியூரானுடன் வினைப்படுத்தப்படும் போது வெளிறிய நீல நிற, படிகவடிக, சேர்க்கைப் பொருளான TiCl3(THF)3 உருவாகிறது.[4]
TiCl3 உடன் டைமெதிலமீனைச் சேர்க்கும் போது அணைவாதலின் காரணமாக இதை ஒத்த அடர் பச்சை நிற அணைவுச் சேர்மமானது உருவாகிறது. வினையில் அனைத்து ஈனிகளும் பரிமாற்றம் செய்யப்படுகிறது, TiCl3 ஆனது டிரைஸ் அசிட்டைல்அசிட்டோனேட்டு அணைவிற்கு முன்னோடிச் சேர்மமாக உள்ளது. 500 °செல்சியசில், TiCl3 ஆனது வெப்பச்சிதைவின் காரணமா இன்னும் குறைக்கப்பட்ட தைட்டானியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது, எளிதில் ஆவியாகக்கூடிய தைட்டானியம் டெட்ராகுளோரைடு(TiCl4) ஆவியாதலின் காரணமாக உருவாகிறது:[5]
தைட்டானியம்(III) குளோரைடானது குளோரைடுகள், ஆல்ககால்கள், ஈதர்கள், நைட்ரைல்கள், கீட்டோன்கள் அல்லது அமீன்கள் ஆகியவற்றை ஈனிகளாகக் கொண்ட சேர்மங்களுடன் நிலைத்தன்மையுள்ள அணைவுச்சேர்மங்களை உருவாக்குகிறது. பயன்பாடுகள்TiCl3 ஒரு முக்கியமான செய்க்லெர்-நட்டா வினையூக்கியாகும். இது பாலிஎத்திலீனின் தொழிலக தயாரிக்பிற்கான மிக முக்கியமான காரணியாக உள்ளதாகும். வினைவேக மாற்றியாகச் செயல்படும் TiCl3 திறனானது முக்கியமாக இதன் பல் உருவத்தோற்றத் (α vs. β vs. γ vs. δ) தன்மை மற்றும் அதன் தயாரிப்பு முறையைச் சார்ந்ததாகும்.[6] ஆய்வகப் பயன்பாடுTiCl3 ஆனது கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு சிறப்பு மிக்க வினைக்காரணியாகவும், ஒடுக்க இணைப்பு வினைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பெரும்பாலும் துத்தநாகம் போன்ற ஒடுக்க வினைக்காரணிகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. இது ஆக்சைம்களை இமீன்களாக ஒடுக்குகிறது.[7] டைட்டானியம் முக்குளோரைடு நைட்ரேட்டை அம்மோனியம் அயனியாகக் குறைத்து அதன் மூலம் நைட்ரேட் மற்றும் அம்மோனியாவின் தொடர்ச்சியான பகுப்பாய்வை அனுமதிக்கிறது.[8] காற்றுக்கு வெளிப்படுத்தப்படும் போது டைட்டானியம் முக்ளோரைடில் மெதுவான சிதைவும் ஏற்படுகிறது, இதன் விளைவாக, குறைத்தல் இணைப்பு வினைகளில் தவறான முடிவுகளை விளைவிக்கின்றன.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia