தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை
தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை (ஆங்கிலம்: Taiping Zoo;மலாய் : Zoo Taiping) என்பது மலேசியாவின் பேராக், தைப்பிங்கில் உள்ள புக்கிட் லாரூட்டில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். 1961-ல் நிறுவப்பட்ட தைப்பிங் உயிரியல் பூங்கா மலேசியாவின் பழமையான உயிரியல் பூங்காவாகும்.[2][3][4] இது மலேசியாவில் உள்ள முக்கிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாகும். இது 36 ஏக்கர்கள் (15 ha) பரப்பளவில் 180 வகையான நீர்நில வாழ்வன, பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என 1300 விலங்குகளைக் காட்சிப்படுத்துகிறது.[5] இரவு பயணம் மூலம் விலங்குகளைக் காண வசதியும் உண்டு.[6] வட மலேசியாவில் உள்ள ஒரே உயிரியல் பூங்கா இது என்பதால், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மலேசியாவின் தேசிய மிருகக்காட்சிசாலை (மிருககாட்சிசாலை நெகாரா) மற்றும் மலாக்கா மிருகக்காட்சிசாலையுடன் ஒப்பிடும்போது, இங்கு அதிக எண்ணிக்கையிலான குச்சவால் சிறுகுரங்குகாணப்படுகின்றது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia