தையல் இயந்திரம்

சிங்கர் நிறுவனத்தின் தையல் இயந்திரம்
தையல் இயந்திரத்தில் நூல் கோத்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் இயங்குபடம். மஞ்சள் நிற நூல் மேற்புறத் தையல், பச்சைநிற நூல் கீழ்ப்புறத் தையல். இவை இரண்டும் முடிச்சு முடிச்சாக இணைந்து பிணைப்பு ஏற்படுகின்றது. சுழலி என்னும் நூற்கண்டு (பாபின்) எவ்வாறு இயங்குகின்றது என்றும் படத்தில் காணலாம். தைக்கப்பட்ட துணியை இயந்திரம் நகர்த்துவதையும் காணலாம்.

தையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். தாமசு செயின்ட் [1] தையல் இயந்திரத்தை 1790களில் கண்டுபிடித்தார். தமிழ்ச் சூழலில் பெண்கள் பலர் தையற்கலையைக் கற்று பொருள் ஈட்டி வருகின்றனர்.

பகுதிகள்

  • தலை
  • சமநிலைச் சில்லு
  • நூல் சுற்றி
  • தையல் அளவு கட்டுப்படுத்தி
  • பட்டி
  • நிறுத்தற் கூறு
  • இழுவைத்தட்டு
  • அமுக்கக் கோல்
  • அழுத்தும் பாதம்
  • ஊசி
  • கீழ் நூல் சுற்றி
  • தார்க் கட்டை

தையல் எந்திர வரலாறு

பண்டைய காலத்தில் மனிதன் தன் உடலை மறைக்க தாவர இலைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஒழுங்கற்ற முறையில் அணிந்து வந்தனர். முதன்முதலில் விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக கருவி ஒன்றைக் கண்டறிந்தனர். அக்கருவியே தற்போதைய தையல் எந்திரத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு வித்திட்டது. அன்று முதல் இன்றுவரை தையல் எந்திரம் பின்வரும் வகையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மரத்தையல் எந்திரம்

1775 ஆம் ஆண்டு வெய்விந்த்தாலி என்பவரால் முதல் தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. இது மரத்தினால் செய்யப்பட்டது. இதனை ஊசியின் நடுப்பகுதியில் துவாரம் செய்யப்பட்ட மரத்தினாலான தையல் எந்திரம் எனலாம்.

தோல் தையல் எந்திரம்

1790 ஆம் ஆண்டு தாமசு செயின்ட் என்பவரால் தோல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

இரும்புத் தையல் எந்திரம்

1830 ஆம் ஆண்டு பார்த்தடெமி திம்மோனியர் என்பவரால் இரும்புத் தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. இது பஞ்சினால் உருவான, நூலால் செய்யப்பட்ட துணியை மட்டுமே தைக்கப் பயன்பட்டது.

ஒரு தலைப்பூட்டு தையல் எந்திரம்

1831 ஆம் ஆ்ண்டு வால்டர்ஹண்ட் என்பவரால் ஒருதலைப்பூட்டு தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. இது ஊசி மற்றும் பிணைப்புத் தையலை அறிமுகப்படுத்தியது. தைக்கப்படுகின்ற துணியின் மேற்புறத்தில் ஊசியானது நூலுடன் கீழே நுழையும்போது கீழே உள்ள நூலுடன் தையல் உருவாகும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இலியாசுகோப்பு தையல் எந்திரம்

1845 ஆம் ஆண்டு இலியாசுகோ என்பவரால் தொழில் நுணுக்கங்களுடன் கூடிய புதிய தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. வளைவான துவாரம் கொண்ட ஊசியினையும் கீழ் வழியாக நூலினைச் செலுத்தும் முறையையும் பயன்படுத்தினார். கையினால் தைக்கப்பட்ட முறையைவிட 5 மடங்கு கூடுதலாக ஒரு நிமிடத்திற்கு 250 தையல்கள் தைக்கப் பயன்படுவதாக உள்ளது.

சிங்கர் தையல் எந்திரம்

கி.பி. 1851 ஆம் ஆண்டு செருமனி நாட்டைச் சேர்ந்த ஐசக்சிங்கர் என்பவர் மிகப்பெரிய தையல் எந்திர தொழிற்சாலையை நிறுவினார். இன்றையத் தையல் எந்திரத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார்.

உஷா தையல் எந்திரம்

உஷா தையல் எந்திரமானது 1935 ஆம் ஆண்டு ஜே.ஜே இஞ்சினியரிங் (J J Engineering) நிறுவனத்தாரால் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. A brief history of the sewing machine, ISMACS.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya