தொகுப்பியக்க உயிரியல்தொகுப்பியக்க உயிரியல் (Systems biology) இந்நூற்றாண்டின் தொடக்கம் முதல் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வுத்துறையாகும். தொகுப்பியக்க உயிரியல் என்பது உயிரியலை அடிப்படையாகக் கொண்டது எனினும் பல்துறை அறிவு மற்றும் முழுமை நோக்கு மூலம் உயிரியக்கத்தின் சிக்கலான கூறுகளை அறிய முயலும் உயிரிமருத்துவ ஆராய்ச்சித் துறையாகும். குறிப்பாக 2000 முதலே இந்த கருத்து உயிரியலின் பல துறைகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் உயிரிய அமைப்புகளின் பல்வேறு கூறுகளுக்கிடையே உள்ள ஊடாடல்களையும், இத்தகு ஊடாடல்கள் உயிரிய அமைப்புகளுக்கு எவ்விதம் செயற்பாடுகளையும், தன்மையையும் அளிக்கிறது என்பதைக் குறித்து ஆய்வுகள் செய்யப்படுகிறது (உதாரணமாக நொதியங்களும், வளர்சிதைமாற்றத்தில் உருவான பொருட்களும் ஒரு வளர்சிதைமாற்றத் தடவழியில் எவ்விதம் ஊடாடுகின்றன என்பதைக் குறித்த ஆய்வுகள்)[1][2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia