தொடர்வைப்புத் தொகைதொடர் வைப்புத்தொகை (Recurring Deposit) என்பது இந்திய வங்கிகள் வழங்கும் ஒரு சிறப்பு வகையான கால வைப்பு முறையாகும். இது வழக்கமான வருமானம் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை வைப்பு செய்ய உதவுகிறது. தொடர் வைப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்புகளுக்கு பொருந்தும் விகிதத்தில் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். [1] இது ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர தவணைகளில் நிலையான வைப்புத்தொகை செய்வதற்கு ஒத்ததாகும். இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் அனைத்து வைப்புத்தொகைகளுடன் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் முதிர்ச்சியடையும். தொடர் வைப்புத் திட்டங்கள், வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிலையான தொகையின் வழக்கமான மாதாந்திர வைப்புத் தொகையின் மூலம் தங்கள் சேமிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. தொடர் வைப்புத்தொகையின் குறைந்தபட்ச காலம் ஆறு மாதங்கள் மற்றும் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் ஆகும்.[2] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia