தொன்னூல் விளக்கம்

தொன்னூல் விளக்கம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் என அறியப்பட்டவரும், கான்சுடன்டைன் சோசப்பு பெசுக்கி (Costanzio Giuseppe Beschi) [1680-1746] என்னும் இயற்பெயர் கொண்டவருமான இத்தாலியப் பாதிரியார் இந்நூலை இயற்றினார். இது 1730 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு[1], 1838-ஆம் ஆண்டில் புதுவையில் முதன்முறையாகப் பதிப்பிக்கப் பட்டது. ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.

அமைப்பு

இந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

  1. எழுத்ததிகாரம்
  2. சொல்லதிகாரம்
  3. பொருளதிகாரம்
  4. யாப்பதிகாரம்
  5. அணியதிகாரம்

என்பனவாம். மொத்தம் 370 பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40 பாக்களும், சொல்லதிகாரத்தில் 102 பாக்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100 பாடல்களும், அணியதிகாரத்தில் 70 பாடல்களும் உள்ளன[2]

சிறப்பு

  1. எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல்.
  2. கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல்.
  3. அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல்.

உரை

இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார்.


குறிப்புகள்

  1. இளங்குமரன், 2009. பக். 382.
  2. இளங்குமரன், 2009. பக். 383.

பதிப்புகள்

  • தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை, 1978
  • ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, 1984 (முதற் பதிப்பு)

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya