தொலைநிலைக் கல்வி (Distance education) தொலைதூரக் கல்வி என்றும் அழைக்கப்படுகிறது, இது எப்போதுமே பள்ளியில் வகுப்பிற்குச் சென்று பயிலாத மாணவர்களின் கல்வியினைக் குறிப்பதாகும், [1][2] அல்லது கற்பவரும் ஆசிரியரும் நேரம் மற்றும் தூரம் இரண்டிலும் பிரிக்கப்பட்டிருப்பதனைக் குறிப்பதாகும்.[3] பாரம்பரியமாக, இது வழக்கமாக கடித வழிப் படிப்புகளை உள்ளடக்கியது, அதில் மாணவர் பள்ளியுடன்/கல்லூரியுடன் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறார். தற்போது தொலைதூரக் கல்வி என்பது இணையம் அல்லது காணொளிக் கருத்தரங்கு போன்ற தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியுடன் உருவாகியுள்ளது.[4] தொலைதூரக் கற்றல் திட்டமானது முற்றிலும் தொலைநிலைக் கற்றலாக இருக்கலாம் அல்லது எழில்வரிக் கற்றல் மற்றும் பாரம்பரிய வகுப்பறை அறிவுறுத்தலின் கலவையாகயும் இருக்கலாம் .[5]
வரலாறு
தொலைதூரக் கல்விக்கான ஆரம்ப முயற்சிகளில் ஒன்று 1728 இல் விளம்பரப்படுத்தப்பட்டது. வாராந்திர அஞ்சல் பாடங்கள் மூலம் திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களைத் தேடிய "ஷார்ட் ஹேண்ட் என்ற புதிய முறையின் ஆசிரியரான கலேப் பிலிப்சு இதனை பயன்படுத்தியதாக போசுட்டன் கெசட்டில் இருந்தது. [6]
அஞ்சலட்டையில் முதல் தொலைதூரக் கல்விப் பாடத்தை 1840களில் சர் ஐசக் பிட்மேன் வழங்கினார், இவர் சுருக்கெழுத்து முறையைக் கற்றுக்கொடுத்தார். மாணவர்களின் பின்னூட்டத்தின் கூறு பிட்மேனின் அமைப்பில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது. [7] 1840 இல் இங்கிலாந்து முழுவதும் ஒரே மாதிரியான தபால் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்தத் திட்டம் சாத்தியமானது
சான்றுகள்
↑Kaplan, Andreas M.; Haenlein, Michael (2016). "Higher education and the digital revolution: About MOOCs, SPOCs, social media, and the Cookie Monster". Business Horizons59 (4): 441–50. doi:10.1016/j.bushor.2016.03.008.
↑Holmberg, Börje (2005). The evolution, principles and practices of distance education. Studien und Berichte der Arbeitsstelle Fernstudienforschung der Carl von Ossietzky Universität Oldenburg [ASF] (in ஜெர்மன்). Vol. 11. Bibliotheks-und Informationssystem der Universitat Oldenburg. p. 13. ISBN3-8142-0933-8. Retrieved 2011-01-23.