தொல்லியல் அருங்காட்சியகம், சாரநாத்

தொல்லியல் அருங்காட்சியகம், சாரநாத், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரனாசி மாவட்டத்தில் உள்ள சாரநாத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் மிகப் பழைய தொல்லியல்கள அருங்காட்சியகம் இதுவேயாகும். [1]

அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சாரநாத்துக்கு அருகில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கும் முடிவு 1904 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் இங்கு கிடைத்த அரும்பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்கும், ஆய்வு செய்வதற்குமாகப் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் ஐந்து காட்சிக்கூடங்களும், இரண்டு விறாந்தைகளும் உள்ளன. இங்குள்ள அரும்பொருட்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளைச் சேர்ந்தவை.

இங்குள்ள காட்சிக் கூடங்கள் அவை கொண்டுள்ள அரும் பொருட்களின் தன்மையையொட்டிப் பெயரிடப்பட்டுள்ளன. இவை, ததகதா, திரிரத்னா, சாக்கியசிம்ம, திரிமூர்த்தி, அசுத்தோசு என்பன. விறாந்தைகள் வாஸ்துமண்டன, சில்பரத்தின என்னும் பெயர்கள் கொண்டவை.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Museum - Sarnath". Archived from the original on 2017-10-17. Retrieved 2009-03-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya