தொழிலாளர் சர்வாதிகாரம்

தொழிலாளர் சர்வாதிகாரம் ( ஆங்கிலம்: Dictatorship of the proletariat) அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஒரு அரசியல் கருத்து நிலை ஆகும். பொதுவுடமைக் கோட்பாட்டில் வர்க்கமற்ற சமுதாயம் அமைவதற்கு முன்பும், முதலாளி வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் உள்ள இடைப்பட்டதான ஒரு நிலையே தொழிலாளர் சர்வாதிகாரம் எனப்படுகிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவம்

முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும், சோசலிச சமுதாய கட்டமைத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டத்தில் சமுதாயத்தின் அரசியல் நிறுவனமாக, கட்டாயம் இருக்க வேண்டியது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். [1] பாட்டாளி வர்க்க சர்வாதிகார காலகட்டத்தில் நடைபெறுகிற வர்க்கப் போராட்டத்தின் ஐந்து வடிவங்கள்.

  1. வென்று வீழ்த்தப்பட்ட சுரண்டலாளர்களை அடக்குவது.
  2. உள்நாட்டுப்போர்
  3. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை தீங்கற்றதாகச் செய்தல்
  4. முதலாளித்துவ நிபுணர்களை பநன்படுத்திக்கொள்வது
  5. புதிய உழைப்புக் கட்டுப்பாட்டைப் புகட்டுவது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வளர்ச்சி

சோசலிசப் புரட்சியை விரிவுபடுத்திப் பூர்த்திசெய்வதும், முற்றிலும் பதிய பொருளாதார அமைப்பைக் கட்டுவதும், சுரண்டும் வர்க்கங்களை அப்புறப்படுத்தி சமுதாயத்தின் சமூகக் கட்டமைப்பை மாற்றுவதும்,புதிய அறிவாளி ஊழியர்களை வளர்ப்பதுபுதிய சமுதாய சமூகக் கட்டமைப்பை மாற்றுவதற்கான பணிகளைச் செய்வது, மனித உள்ளங்களில் புரட்சியை நிகழ்த்துவது, கம்யூனிச சித்தாந்தத்தின் வெற்றியை உத்திரவாதம் செய்வது, ஆகும்[2]

தமிழ்ச் சூழலில்

தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் நெடுங்காலமாக பட்டாளி வர்க்க புரட்சியையும், அதைத் தொடர்ந்த பட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் தமது இலக்காகப் பிரகடனப்படுத்தி இருந்தனர். எனினும் இந்த உரையாடலில் தற்காலத்தில் புதிய சனநாயகம், மக்கள் சனநாயகம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விமர்சனங்கள்

சோவியத் ஒன்றியத்தில், சீனாவில், கியூபாவில் தொழிலாளர் சர்வாதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்த சர்வதிகாரம் பொதுவுடமைக் கட்சி சர்வாதிகாரமாகவும், குறிப்பாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய தலைவர்களின் சர்வாதிகாரமாக விளங்கின.

அரசின்மைக் கொள்கையாளர்கள் தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவம் கைக்கொண்ட அதிகாரத்தைப் போன்ற பண்புகளையே கொண்டிருக்கும் எனவும், அதனால் யாருடைய சர்வாதிகாரம் என்றாலும் எதிர்க்கப்படவேண்டும் எனவும் விமர்சித்தனர்.

மேலும் பார்க்கவும்

சான்றாவணம்

  1. Collected works, V. I. Lenin-Vol-20, page-217 -
  2. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- முன்னேற்றப் பதிப்பகம்-மாஸ்கோ-1978 page-399 -
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya