தோட்டியுட மகன்
தோட்டியுட மகன் (தோட்டியின் மகன் ) என்பது 1947 ஆம் ஆண்டு தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய ஒரு மலையாள புதினமாகும். [1] ஆலப்புழையில் மலம் அள்ளும் தொழில் செய்யும் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் கதையை இந்தப் புதினம் சித்தரிக்கிறது. இந்த 1947 ஆம் ஆண்டு வெளியானது. ஆழப்புழை நகரசபையில் மலமள்ளும் தொழிலினை செய்துவருகின்ற தோட்டிகளின் வாழ்க்கையினை பற்றியும் அவர்களின் உணர்வுகள்,வெளிப்பாடுகள் போன்றவற்றினை மையமாகக் கொண்டு இந் நாவல் எழுதப்பட்டுள்ளது. [2] கதைச் சுருக்கம்தோட்டியுட மகன் புதினத்தில், மூன்று தலைமுறைகளாக மலம் அள்ளும் தோட்டிகளின் கதை சொல்லபட்டுள்ளது. முதல் இரண்டு தலைமுறையினர் தங்கள் தனித்துவத்தை அடைய போராடுகிறார்கள்; இதனால் அவர்கள் துன்பப்படுகிறார்கள், என்றாலும் அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை, ஒடுக்கப்படுகிறார்கள், ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் போராட்டங்கள் மூன்றாம் தலைமுறை தோட்டியினெ மகனுக்கு தனது தனிப்பட்ட கௌரவத்தை உறுதிப்படுத்தவும், சக தீண்டத்தகாதவர்கள் மீதான ஒடுக்குமுறை, பாரபட்சத்தை மீறி உயரவும் உதவுகின்றன . மலையாளத்தில் தோட்டியின் மகன் வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து பேசப்பட்டுவரும் நாவல். மேடையிலும் எழுத்திலும். திருநெல்வேலிச் சீமையிலிருந்து மாடுகள் போல் பிடித்துக் கொண்டு போகப்பட்ட இந்தத் தோட்டிகள் தலித் வாழ்க்கையின் அவலத்தை நம் மனதில் ஆழமாகப் பதியவைக்கின்றனர். பின்னணிதனது சட்டப்படிப்பை முடித்த பின்னர், தகழி கேரள கேசரியில் ( கேசரி பாலகிருஷ்ண பிள்ளை நடத்திய ஒரு இதழ் ) பத்திரிகையாளராக சேர்ந்தார். அம்பலப்புழா முன்சிஃப் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த பி. பரமேஸ்வரன் பிள்ளையிடம் பயிற்சி வழக்கறிஞராக இணைந்து பயிற்சி பெற்றார். இந்த காலகட்டத்தில் இவர் மக்களின் பிரச்சினைகளை அறிந்தார். இதுவே தொட்டியுட மகனை எழுத உத்வேகமாக இருந்தது. மொழிபெயர்ப்புகள்இந்த புதினத்தை "Scavenger's Son" என்ற பெயரில் ஆர். இ. ஆஷர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [3] தமிழ் மொழிபெயர்ப்புஇதனை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார். 1957 களில் சரஸ்வதி இதழில் மொழிபெயர்ப்பு தொடர்கதையாக வெளியிடப்பட்டபொழுதும், 2000ம் ஆண்டில்களில்தான் இக்கதை புதினவுரு பெற்றது. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த மொழியாக்க நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றது. தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை (1947) மொழிபெயர்த்தபோது (1951, 52) சுந்தர ராமசாமி அவர்களுக்கு வயது இருபது , இருபத்தியொன்று மட்டுமே. இவரது தோட்டியின் மகன் மொழிபெயர்ப்பை முதலில் படித்துப் பார்த்து ஊக்குவித்தவர் அவரது நண்பர் தொ. மு. சி. ரகுநாதன்.இந்நூலை தொடர்கதையாக சரஸ்வதியில் வெளியிட்டவர் அவரது நண்பர் வ. விஜயபாஸ்கரன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நூலாக்கம் செய்ய முயன்ற போது சரஸ்வதி தொகுப்பைத் தந்து உதவியவர் அவரது நண்பர் கர்ணன். சரஸ்வதி இதழில் சுந்தர ராமசாமி அவர்கள் பெயரில் ஏற்கனவே சிறுகதைகள் வந்து கொண்டிருந்ததால், என். எஸ். ஆர் என்ற பெயரில் தோட்டியின் மகன் தொடர்கதையாக வெளியாயிற்று மார்ச் 57 இலிருந்து ஜூன் 58 வரையிலும். தமிழில் வெளியிடத் தகழி ஐம்பதுகளிலேயே உரிமையும் தந்திருந்தார் என்ற போதும் மொழிபெயர்த்து ஐம்பது வருடங்கள் கழித்துதான் நூலாக வெளிவந்தது. வெளியிணைப்புகள்http://naarchanthi.wordpress.com/2014/02/17/தோட்டியின்-மகன்/
|
Portal di Ensiklopedia Dunia