தோணியாமை
பச்சை கடல் ஆமை (Green sea turtle, செலோனியா மைடாசு), என்பது பச்சை ஆமை, கருப்பு (கடல்) ஆமை அல்லது பசிபிக் பச்சை ஆமை என்றும் அழைக்கப்படுகிறது.[4] இது செலோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பெரிய கடல் ஆமை வகையாகும்.[5] இது செலோனியா பேரினத்தில் உள்ள ஒற்றைச் சிற்றினமாகும். இது உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடல்கள் முழுவதும் பரவியுள்ளது. அத்திலாந்திடிக் மற்றும் அமைதிப் பெருங்கடல்களில் இரண்டு வேறுபட்ட மக்கள்தொகையுடன் காணப்படும் பச்சை ஆமை இந்தியப் பெருங்கடலிலும் காணப்படுகிறது.[6][7] பச்சை ஆமை![]() ஊர்வனவற்றில் முன்னோடியாக ஆமை கருதப்படுகிறது. உலகில் பொதுவாக 275 வகை ஆமைகள் உள்ளன. சில வகை நிலத்தில் வாழும் தன்மையுடையவை. சில வகை நீர், நிலம் இரண்டிலும் வாழும் தன்மையுடையன. பெரும்பாலான ஆமைகள் நீரில் வாழ்பவையே. கடலில் ஐந்து வகையான ஆமைகள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பச்சை ஆமை (Chelone mydas). முதன் முதலில் தோன்றிய கடலாமை இவை என்று விலங்கியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அமைப்புதட்டையான உடலமைப்பைக் கொண்டது. மேலோடு முட்டை வடிவத்தில் இருக்கும். இதய வடிவ ஓட்டுடன் சிறிய வட்ட வடிவ முன்தலையுடன் கூடிய ஒழுங்குபடுத்தப்பட்ட உடலமைப்பை கொண்டது. ஓட்டின் பக்கவாட்டில் நான்கு இரட்டைத் தட்டு அமைப்புகள் காணப்படும். மூக்குப் பகுதியில் ஓர் இரட்டைச் செதில்கள் காணப்படுகின்றன. வயிற்றுப்பகுதியில் ஓடு மஞ்சள் நிறத்திலிருக்கும். பொதுவாக 250 கி.கி எடையளவுக்கு வளரக்கூடியது. ஊர்ந்து செல்லும் பாதையின் அகலம் ஏறத்தாழ 1 மீ இருக்கும். பெரிய பரந்த மணற் பரப்புகளில் ஊர்ந்து செல்லும் இயல்புடையது. வாழ்விடம்தனியாக வாழும் மிகவும் மந்தமான உயிரினமாகும். இதற்குக் காரணம் மூச்சு உறுப்புகளின் அமைப்பேயாகும். உடலைக் கெட்டியான ஓடு மூடியிருப்பதால், இதனால் விரியவும் சுருங்கவும் முடிவதில்லை. பரவல்வெப்ப, மிதவெப்ப (25-35℃) நீர்நிலைகளில் பரந்து காணப்படுகிறது. ஆழமற்ற (25மீ) பகுதிகளிலும் அதிகமாகவும் குளிர்ச்சியான தீவுகளில் குறைந்த அளவிலும் காணப்படும். இந்தியப் பெருங்கடல், அந்தமான் நிக்கோபார், லக்காவீல், மினிகாய் தீவுகள் கேரளத்தில் கொல்லம், தமிழ்நாட்டில் தென்கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடாவில் மிகுந்து காணப்படுகிறது. இனப்பெருக்கம்முட்டையிடும் காலத்திற்கு முன்பே புணர்கின்றன. புணரும் போது சேமித்து வைக்கப்படும் விந்து எதிர்காலத்தில் கருத்தரிக்கப் பயன்படுகிறது.ஒவ்வோர் ஆண்டும் புணரும் போது படிப்படியாக கருத்தரிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இனப்பெருக்க இடைவெளி பொதுவாக இரண்டு ஆண்டுகளாகும். சில சமயங்களில் ஒன்று, மூன்று, நான்கு ஆண்டுச் சுழற்சிகளும் காணப்படும். புணர்ச்சிக்கு நேரம் வந்துவிட்டால் தன் செயலை நிறுத்திவிட்டு ஆண், பெண் உறவைக் கொண்டாடும் இயல்புடையது. எதிர்உயிரை கவர்வதற்காக மணச் சுரப்பிகள் உள்ளன. முட்டையிடுதல்இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டையிடும். இளவேனிற் காலத்திலும், கோடைக் காலத்திலும் முட்டையிடத் தொடங்குகிறது. பொதுவாக ஆமை எப்போதும் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கும். கடலிலிருந்து முட்டையிடுவதற்காகக் கடற்கரையை நோக்கி இரவில் வரும். கரைக்கு வந்த அரை மணி நேரத்தில் முட்டையிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும். உலர்ந்த, குறைந்த ஈரமுள்ள மணலையே முட்டையிடத் தேர்ந்தெடுக்கும். மணலில் காற்று வசதி உள்ளதா எனவும் பரிசோதிக்கும். முட்டையினைப் பாதிக்கும் கல், கிளிஞ்சல் இல்லாத இடத்தையேத் தேர்ந்தெடுக்கும். தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தவுடன் தன் முன்கால்களின் மூலம் இடத்தைத் தூய்மை செய்து குப்பைகளை அகற்றுகிறது. முன்கால்களையும், பின்கால்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி குழி தோண்டுகிறது. குழிக்குள் உட்கார்ந்து குழியை மூடி முட்டையிடத் தொடங்கும். 2-5 முட்டைகள் இடுகின்றது. இறுதி முட்டையை இட்டவுடன் குழிக்கு வெளியே குவிந்துள்ள மணலைப் பின்கால்களின் உதவியால் தள்ளிக் குழியை மூடுகிறது. முட்டையின் வடிவம் உருண்டையாக இருப்பதோடு தோல் போன்றும் காணப்படுவதால், குழியில் விழும்போது உடையாமல் பாதுகாப்பாக இருக்கிறது. முட்டை 48 முதல் 70 நாள்கள் வரை கரைகளில் காணப்படுகிறது. சூரிய ஒளியின் உதவியால் ஆமைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவரும். குஞ்சுகளின் நீளம் 2.5-10 செ.மீ. பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் வெளிவருகிறது. மணற்பரப்பு சூடாக இருக்கும் போது வெளிவருவது கிடையாது. முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் கடலை நோக்கி நீந்த தொடங்கி விடுகின்றன. பிறக்கும்போது கடினமான மேற்புற உடலமைப்பையும், வெளுத்த அடிப்புறத்தையும் பெற்றிருப்பதால் பெரிய மீன்கள், பறவைகளிடத்தில் தப்பித்துக் கொள்கிறது. குஞ்சுகளின் வளர்ச்சி மழைக் காலத்தை விடக் கோடைக் காலத்தில் விரைவாக நடைபெறுகிறது. மழைக்காலத்தில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவர சராசரியாக 91 நாளாகும். கோடைக் காலத்தில் 56 நாள்களே போதும். எதிரிகள்முட்டைகள் பறவைகளாலும், பாலூட்டிகளாலும் அழிக்கப்படுகிறது. கீரி, முள்ளம்பன்றி, நாய், நரி போன்ற விலங்குகள் ஆமை முட்டையிடும் இடங்களைக் கண்டுபிடித்து உணவாக உட்கொள்கின்றன. எஞ்சியிருக்கும் முட்டைகளைப் பருந்துகள் உணவாக உட்கொள்கின்றன. நீரில் வாழும் நண்டுகள் குட்டி ஆமைகளை உண்கின்றன. இவ்வெதிரிகளிடமிருந்து தப்பிக்கும் குஞ்சுகள் கடல் நீருக்குள் சென்ற பின் சுறா மீன்களால் உட்கொள்ளப்பட்டு விடுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த முதிர்ந்த ஆமைகளை திமிங்கலங்கள் உட்கொள்கின்றன. பிடிக்கும் முறைஈட்டி, தூண்டில் மிதவை வலை, இறால் போன்றவற்றின் மூலம் பிடிக்கலாம். ஆமையைக் களைப்படையச் செய்யும் வரையில் விரட்டிச் சென்று பிடிக்கும் வழக்கமும் உண்டு. ஈட்டி எய்து பிடிக்கும் முறையும் சில இடங்களில் கையாளப்படுகிறது. பயன்கள்பெரும்பாலும் இறைச்சிக்காக பிடிக்கப்பட்டு உணவாகப் பயன்படுகிறது. இறைச்சியில் புரதச்சத்து மிகுந்துள்ளமையால் முழு உணவாகும். தோல் மிகுந்த மதிப்புள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆமையின் தோல் பன்னாட்டுச் சந்தையில் முதன்மைப் பொருளாகத் திகழ்கிறது. மேலோடு, கீழோடு ஆகியவற்றின் ஓரங்களிலிருந்து எடுக்கப்படும் குருத்தெலும்பு விலை உயர்ந்த சாறு தயாரிப்பதில் பயன்படுகிறது. ஆமை ஓடு ஐரோப்பாவில் அலங்காரப் பொருளாக பயன்படுகிறது. ஜப்பான் நாட்டில் கலாச்சார மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. ஜப்பான், சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் நாடுகளில் தோலை இறக்குமதி செய்கின்றனர். ஆமை எண்ணெய் பலவிதமான அழகு பொருள்களிலும் இதய நோய்களுக்கான மருந்துகளிலும் பயன்படுகிறது. உடற்பகுதிகள் வணிகச் சிறப்பு வாய்ந்தவை. மேல் ஓடு பலவித அணிகலங்களைச் செய்ய பயன்படுகிறது. இதன் ரத்தம் மூல நோயையும், ஆஸ்துமாவையும் குணப்படுத்தும். மேற்கோள்கள்
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia