தோரிசு விக்கர்சுதோரிசு விக்கர்சு (Doris Vickers) (born 1980) ஓர் ஆத்திரிய தொல்வானியலாளர் ஆவார். இவர் யுனெசுகோவின் வானியல் மரபுக்கான வலைவாசலின் உள்ளடக்க மேலாளர் ஆவார்.[1] இவர் உருவேடிகருடன் இணைந்து செயல்படும் தொன்மை வானங்கள் திட்டத்தின் உலகநிலை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[2] இது 2006 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மாந்தப் பண்பாடுகளின் அறிவு அடித்தளத்தை உருவாக்கி அவற்றின் வானியல் அறிவு விரிவைப் பதிவு செய்து "ஒருகோள் – ஒருமாந்தரினம் – ஒருவானம் – ஓர் அறிவு அடித்தளம்" என்பதை விளக்குவதாகும், இந்தத் திட்ட அன்மைய முயற்சி, 2016 இல் இருந்து "முழுத் திட்டத்தையும் புதிய சூழலுக்கு மாற்றுவதே" ஆகும்.[3] இவர் 2016 பிப்ரவரியில் [[பிபிசி வானொலி அலைவரிசை 4 இல் ஆர்வத்தின் அருங்காட்சியகம் எனும் நிகழ்ச்சியில் தோன்றினார். இந்தக் கற்பனை அருங்காட்சியகத்துக்கு விண்மீன் கடிகாரத்தைக் கருதுகோள்நிலைக் கொடையாக வழங்கினார்.[4] வெளியீடுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia