தோல்![]() தோல் எனப்படுவது விலங்குகளின், குறிப்பாக முதுகெலும்பிகளில் காணப்படும் உயிர் இழையங்களாலான வெளிப்புற உறை ஆகும். தோலே புறவுறைத் தொகுதியின் மிகப்பெரிய பகுதியாகும். உடலில் காணப்படும் உறுப்புக்களில் மிகப் பெரியதும், மிக விரைவான வளர்ச்சியைக் கொண்டிருப்பதும் தோலாகும்[1]. பாலூட்டிகளிலிருந்து நீர்நில வாழ்வன, ஊர்வன, பறவைகள், போன்றவற்றின் தோல்கள் மாறுபட்டவை[4]. இருவாழ்விகளின் தோல் இருவாழ்விடங்களுக்கு தகுந்தாற்போல் தகவமைப்பு பெற உதவுகிறது.[5] பாலூட்டிகள் அடர்ந்து, பரந்த மென்மயிர்(ஃபர்)களைக் கொண்டுள்ளது[6]. மனிதக் குழுக்களிடையே தோல் நிறம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. தோலின் மேற்பரப்பு பொதுவாக எண்ணெய்ப் பற்றுக் கொண்டதாக உள்ளது, இது பனிக்காலம், வயதுமுதிர்ச்சி போன்ற சில சந்தர்ப்பங்களில் வறண்டதாகவும் காணப்படும். மனித & பாலூட்டிகளின் தோல் அமைப்பு![]() பாலூட்டிகளின் தோலானது இரு கூறுகளைக் கொண்டது.
![]() மயிர், வியர்வைச் சுரப்பி & எண்ணெய்ச் சுரப்பி எபிடெர்மிஸ் (அ) மேற்புறத்தோல்தோலின் மேற்புற எல்லை எபிடெர்மிஸ் (அ) மேற்புறத்தோல் ஆகும். இது உடலின் பாதுக்காப்பு அரணாக விளங்குகிறது. மேலும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், உடலிலிருந்து நீர் ஆவியாதலைத் தடுத்தல், போன்ற பணிகளை ஸ்குவாமஸ் எபிதீலியம் (அ) படை கொண்ட செதின் மேலணி புறவணியிழையங்கள் செய்கின்றன. இவ்விழையம் கெராட்டின் புரதத்தாலான நகமிய உயிரணுக்களைக் (கெராட்டினோசைட்டுகள்) கொண்டுள்ளன. இந்நகமிய உயிரணுக்கள், மேற்புறத்தோல் அடுக்கின் பெரும்பான்மையாக 95% உள்ளன. மேலும் மெர்கெல் உயிரணுக்கள், கருநிறமி உயிரணுக்கள் (மெலனொசைட்டுகள்), வலியுணர் (லாங்கர்ஹான்) உயிரணுக்கள் போன்றவையும் அடங்கியுள்ளன. மேற்புறத்தோலின் மேலடுக்கிலிருந்து மேற்புறத்தோல் மேலும் கீழ்வருமாறு அடுக்குகளாக (அ) படலமாக வகைப்படுத்தப்படுகிறது,[7] கார்னியம் அடுக்கு (அ) கடினப் படலம்கடின உயிரணுக்களைக் கொண்ட மேற்புறத்தோல் அடுக்கு. இக்கடினத் தோல் படலம் கை, கால்களில் அமைந்துள்ளன. இத்தோல் படலம் கடினத்தன்மையுடன் 15-20 அடுக்குகளைக் கொண்டிருக்கும். எனவேதான் காயத்திலிருந்து பாதுகாக்கிறது. லூசிடம் அடுக்கு (அ) தெளிந்த மேற்படலம்கடினத்தோலின் அடிப்புற அடுக்கான இவ்வடுக்கு தெளிவாக ஒளி ஊடுருவக்கூடியத் தன்மை கொண்டது. பாதம், உள்ளங்கைகளிலுள்ள இறந்த உயிரணுக்களில் இத்தெளிந்த மேற்படலம் அமைந்துள்ளது. மேலும் நீர்ப்புகா வண்ணம் அரணாக விளங்குகிறது. கிரேனுலோசம் அடுக்கு (அ) நுண்மணிப் படலம்நுண்மணிப் போன்ற தோலடுக்கு மடிப்பு நிலையில் வரிசைக்கிரமாக அமைந்திருக்கும். படைகொண்ட செதின் மேலணி புறவணியிழையங்கள் ஒன்று முதல் மூன்று அடுக்குகள் வரை தெளிந்த மேற்படலத்தை ஒட்டி அமைந்துள்ளன. இந்நுண்மணிப் படலத்தில் உயிரணு அடுக்குகள் குறைந்தே காணப்படும். ஸ்பைனொசம் அடுக்கு (அ) சுருள் படலம்கனசதுர வடிவ உயிரணுக்கள் பல வரிசையில் அடுக்கப்பட்டாற்போல் நகமிய உயிரணுக்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இதில் 8-10 அடுக்குகள் பன்முக உயிரணுக்கள் உண்டு. இது தோல் படலத்திற்கு அமைப்பு உருவாக்கும் பணியைச் செய்கிறது. இணைப்பு உயிரணுக்களை ஒட்டி அடுக்குகளின் இணைப்புப் பாலமாக விளங்குகிறது. ஜெர்மினேடிவம் அடுக்கு (அ) கீழ்முளை உயிரணுப் படலம்மேற்புறாத்தோலின் ஆழமான அடுக்கு கீழ்முளை உயிரணுப் படலமாகும். மேற்புறத்தோலின் அடிப்புற நகமிய உயிரணுக்கள் மறைமுகச் செல்பகுப்பின் மூலம் புதிய உயிரணுக்களை உண்டாக்குகின்றன. இது கெராட்டினாக்கம் (அ) நகமிய உயிரணுவாக்கம் ஆகும். மெலும் இவ்வுயிரணுக்கள் மேலுள்ள பழைய உயிரணுக்களை வெளி நோக்கித் தள்ளிவிடுகின்றன.வெளி உயிரணுக்கள் புதிதாக உருவாகும் புதிய உயிரணுக்களைப் பாதுகாக்கும். வெளி உயிரணுக்களின் வேதிய தன்மை, அமைப்பு மாறுபட்டு உட்கருவற்ற உயிரணுக்களாக மற்றாமடைகின்றன. இச்செயல் முறையின் போது நகமிய உயிரணுக்கள் கொழுப்புடன் இணைந்து வெளிப்புறத் தளப்பொருளை உருவாக்கி தோலை வலுவாக்குகின்றன.[8] அடித்தள மென்றகடு (அ) தளச்சவ்வுமேற்புறத்தோலும், அடித்தோலும் மெல்லிய தகடு போன்ற கற்றையினால் பிரிக்கப்படுகின்றன. இதற்கு அடித்தளமென்றகடு (அ) தளச்சவ்வு (பேஸ்மென்ட் மெம்பரேன்) என்று பெயர். இச்சவ்வு இவ்விரு பகுதிகளின் பணிகளையும் செய்கின்றது. தளச்சவ்வானது உயிரணு, மூலக்கூறுகளின் போக்குவரத்து இடையூறுகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இவை வளர்ச்சிக்காரணிகள் மற்றும் சைட்டோக்கைன்களுடன் கட்டுண்டு உடற்சீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது.[9] அடித்தோல் (அ) உட்சருமம்மேற்புறத் தோலின் ஆழமான பகுதி அடித்தோல் (அ) உட்சருமம் ஆகும். இவை இணைப்பிழையங்களால் ஆனவை. இதனால் அழுத்தம், இறுக்கம் முதலியவற்றிலிருந்து மெத்தை போல் பாதுக்காக்கிறது. அடித்தோல் உயிரணு வெளித்தளப்பொருட்களின் (எக்ஸ்ட்ரா செல்லுலார் மேட்ரிக்ஸ்) மூலம் இழுவிசைப் பலத்தையும், நெகிழும் தன்மையையும் தோலுக்கு அளிக்கிறது. உயிரணு வெளித்தளப்பொருளானது, புரதம், கார்போவைதரேட்டு உள்ளிட்ட வேதிப் பொருட்களுடன் பொதிந்து, இழைய நார் (கொல்லாஜன் ஃபைப்ரில்ஸ்), நுண்சவ்வு (மைக்ரோ ஃபைப்ரில்ஸ்), இழுதகு நார்கள் (எலாஸ்டிக் ஃபைபர்ஸ்), போன்றவற்றையும் உள்ளடக்கியது. அரும்புப்பகுதி (அ) முளைப்பகுதிவிரல் போன்ற நீட்சிகள் மேற்புறத்தோல் வரையிலும் நீண்டு காணப்படுவதால் இது அரும்பு (பாப்பில்லே) (அ) முளைப்பகுதி எனப்படுகிறது. அரும்புப் பகுதி இலகுவான காற்று இணைப்பிழையத்தால் ஆனது. மேலும் இது சமதளமேற்பரப்பினை ஏற்படுத்தி மேற்புறத்தோலுடன் பொருந்தி இணைப்பை வலுவாக்க உதவுகிறது. சிறுவலைப்பகுதிஅரும்புப் பகுதியின் ஆழமான இடத்துள் தடிமனாக காணப்படும் சிறிய வலைப்போன்ற பகுதி ஆகும். இது அடர்த்தியான ஒழுங்கற்ற இணைப்பிழையத்தால் ஆனது. மேலும் இதில் செறிவுற்ற இணைப்பு நார், நெகிழ் நார், வலை நார் போன்றவை முழுவதுமாக அலைப் போன்று படர்ந்து காட்சியளிக்கின்றன. இப்புரத நார்கள் தோலுக்கு வலுச் சேர்ப்பதுடன் நெகிழவும், நீளவும் உதவுகிறது. இவ்வலைப்பகுதியில் முடியின் வேர்ப்புறம், செபாசியஸ் சுரப்பி, வியர்வை சுரப்பி, நகக்கணு மற்றும் குருதி நாளங்கள் அமைந்துள்ளன. கீழ்த்தோல்தோலின் பகுதியாக அல்லாமல், அடித்தோலுக்கு கீழ் அமைந்துள்ள பகுதி கீழ்த்தோல் ஆகும். எலும்பு, தசை, போன்றவற்றை தோலுடன் இணைக்கும் இணைப்பு பாலமாகச் செயல்படுகிறது. மேலும் தோலுக்கு நரம்பு, குருதி பகிர்வானாகவும் உள்ளது. இது இலகுவான இணைப்பிழையத்தாலும், நெகிழ் புரதத்தாலும் (எலாஸ்டின்) ஆனது. நாருயிரணு (ஃபிப்ரோப்ளாஸ்ட்), பெருவிழுங்கி, கொழுப்பினியிழையம் (அடிபோசைட்) (உடலின் மொத்த கொழுப்பில் 50% கீழ்த்தோலில் உள்ளது) போன்ற முக்கிய உயிரணு வகைகளைக் கொண்டுள்ளது. கீழ்த்தோலின் மற்றொரு பெயர் தோலடியிழையம் (சப்-க்யூட்டேனியஸ் திசு) ஆகும். மேற்புறத்தோலின் புறப்பகுதியில் ஸ்டெஃபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் நுண்ணுயிர்க் கூட்டங்கள் அதிகம் காணப்படுகிறது. தோலின் அமைவிடத்தைப் பொருத்தே நுண்ணுயிர்க் கூட்டங்களின் அடர்த்தியும் அமைகிறது. தொற்று நீக்கப்பட்ட புறத்தோற்பகுதியில் உடனடியாக ஏனைய ஆழமான தோற்பகுதிகளான மயிர்க்கால்கள், மனித இரையகக் குடற்பாதை, கழிவு-இனப்பெருக்கப் பாதைகளின் முகப்பு ஆகியவற்றிலிருந்து பரவும் பாக்டீரியாக்கள் நுண்ணுயிர்க்கூட்டங்களை அமைக்கின்றன. தோல் - குறுக்கு வெட்டுத்தோற்றம்மீன், இருவாழ்விகள், பறவை, ஊர்வனவற்றின் தோல் அமைப்புமீன்கள்![]() செதில்கள் - தம்பட மீன் (லேபியோ ரோஹித்தா) மீன்கள் மற்றும் பெரும்பாலான இருவாழ்விகள் தங்களின் தோற்பகுதியில் உயிருள்ள செல்களையும், சிறிய அளவு கெராட்டின் (அ) நகமியம் எனும் புரதத்தினையும் தோலின் மேல் அடுக்கில் பெற்றுள்ளன. பொதுவாக இவற்றின் தோல்கள் அயல் காரணிகளை உட்புகவிடும் (அ) ஊடுருவவிடும் தன்மை கொண்டதாகும். தோலிலுள்ள துளைகள் பெரும்பாலான இருவாழ்விகளின் சுவாச உறுப்பாகவும் செயல்படுகின்றன. சட்டக மீன்களின் உட்தோலில் நாற்காலிகளைப் போன்று இணைப்பிழையத்தால் ஆனது. பெரும்பாலான மீன்களின் புறத்தோல் திடமான, நீர் பாதுகாப்புக் கவசமான செதில்களால் ஆனது. ஊர்வனவற்றின் செதில்கள், பாலூட்டியான எறும்புண்ணியைப் போன்று நீர்வாழ்வனவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இருவாழ்விகள்இருவாழ்விகள் தோற்பகுதியில் இருவகையான சுரப்பிகளைக் கொண்டுள்ளன. அவை நுண்மணி, கோழைச் சுரப்பிகள் ஆகும். இச்சுரப்பிகள் தோலின் கவசமாக உடல் முழுதும் படர்ந்துள்ளன. இச்சுரப்பிகள் மூன்று (நாளம், இடைப்பகுதி, நுண்குழிவுகளுடைய சுரப்பை) பகுதிகளைக் கொண்டுள்ளது. ![]() நுண்மணிச் சுரப்பிகள்தோற்பகுதியில் அடர்ந்த நச்சு கொண்ட நுண்ணிய மணிவடிட சுரப்புப் பகுதிகள் காணப்படுகின்றன. இச்சுரப்புகளின் நஞ்சின் அளவு, அடர்த்தி, பரவல், போன்றவை இருவாழ்விகளின் வரிசை, சிற்றினம் ஆகியவற்றுள் ஒன்றனுக்கொன்று மாறுபட்டவை. இந்நஞ்சு சில சமயம் உயிர்க்கொல்லும் நஞ்சாகவும், சில சமயம் எவ்வித விளைவுகளையும் முதுகெலும்புள்ள விலங்குகளில் ஏற்படுத்துவதில்லை. கோழைச் சுரப்பிகள்இவை நுண்மணிச் சுரப்பிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பணியைச் செய்கின்றன. உடலின் மேற்பரப்பை புறக்காரணிகளான வெப்பம், நீர், pH, நிலத்தில் ஏற்படும் உராய்விலிருந்து பாதுகாக்க இக்கோழைச் சுரப்பிகள் சுரக்கும் கோழைப்படலம் உதவுகின்றது. உடற்தோலின் ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது. வேட்டை விலங்குகளின் பிடியில் இருந்து தப்பிக்க கோழைப்படலத்தின் இவ்வழுக்கும் தன்மை உதவுகிறது. மேலும் நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. பறவைகள் & ஊர்வனபறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் புறத்தோல் பாலூட்டிகளை ஒத்து காணப்படுகிறது. மேலும் இவைகளின் புறத்தோலில் நீரின் தேவையைக் குறைக்க இறந்த நகமிய செல்கள் உதவுகின்றன. இதே மதிரியான இறந்த நகமிய செல்கள் இருவாழ்வியான தேரையிலும் காணப்படுகிறது. பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் தோலிலும் சில சுரப்பிகள் காணப்படுகின்றன. இச்சுரப்பிகள் சில முக்கிய பணிகளுக்கு உதவுகின்றன. அவை இனப்பெருக்க ஈர்ப்பிற்கான -பெரமோன் சுரப்பிகள், பறவைகளின் தொலில் இறகுகளை உலர்வாக வைத்திருக்க மெழுகைச் சுரக்கும் இறகுகளின் வால்பகுதியிலுள்ள யூரோப்பைகியல் சுரப்பிகள் போன்றவை ஆகும். தோலின் பணிகள்
மெலானின்மெலானின் என்பது ஒரு பழுப்பு கலந்த கருப்பு நிறமுடைய நிறமியாகும். ஈமோகுளோபின் அற்ற இந்நிறமி உரோமம், தோல், கண் உறை ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. தோலின் கிழுள்ள டெர்மிசு பகுதியில் காணப்படும் மெலனோபோர் செல்களில் சிறு துகள்களாக இது சேமிக்கப்படுகிறது. இச்செல்களில் காணப்படும் டைரோசின் என்ற அமினோ அமிலத்திலிருந்து மெலானின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென டைரோசினேசு நொதி அச்செல்களில் அமைந்துள்ளது. டைரோசின் + டைரோசினேசு = மெலானின் மெலானின் நிறமி தோற்றத்தில் உள்ள குறைபாடுகளால் நிறம் அதிகரிப்போ அல்லது குறைதலோ நிகழ்கின்றது. பொதுவான நிறம் அதிகரிப்பு•அடிசன் நோயில் பொதுவான நிறமதிகரிப்பு நிகழ்கிறது. ஒளிபடும் தோல் பரப்புகள், உள்வாய் பகுதிகளில் நிறமி பரவல் முதலியன ஏற்படும். •ஈசுட்ரோசன் இயக்குநீர் கருவுற்ற காலங்களில் அதிகரிப்பதால் முகம், மார்பு ஆகிய இடங்களில் நிறம் அதிகரிக்கும். •ஆர்சனிக் நச்சுப்பொருளால் உடல் முழுவதும் சிறு புள்ளிகளாக நிறமிகள் அமையும். பொதுவான நிறக்குறைவுகுறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோய் உண்டாகிறது. இது மரபணு குறைபாடு நோயாகும். மெலானின் தோன்றுவதற்கான டைரோசினேசு செயல் இங்கு நடைபெறுவதில்லை. வெண்பொன் நிறத்தில் தலை மயிர், பார்வைக் குறைபாடு, ஒளி வெறுப்பு போன்ற தன்மைகள் உண்டாகும். இவர்களின் தோலில் அதிக அளவு சூரிய ஒளி பட நேர்ந்தால் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆங்காங்கு நிறம் குறைதல்•லியூக்கோடெர்மா என்ற வெண்தோல் குறைபாட்டு நோயால் ஆங்காங்கே வெண்மைத் திட்டுகள் தோலில் தோன்றும். இது ஒரு பாரம்பரியக் குறைபாட்டு நோயாகும். •விட்டிலிகோ என்ற வெண் தோல் குறைபாட்டு நோயால் ஆங்காங்கு வெண்மைப் பகுதிகள் தோன்றும். •தொழுநோய், குணமாகும் காயங்கள், கதிரியக்க பாதிப்பு போன்றவை பெறப்படும் நிறக் குறைபாடுகள் ஆகும். == சூரியக் கதிரியக்க விளைவுகள் ==, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், புற ஊதா விளக்குகள், பற்றவைக்கும் வேலைகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் புற ஊதாக்கதிர்கள் தோலின் ஒரு சில மில்லிமீட்டர்கள் மட்டுமே நுழைகின்றன. எனவே இவற்றின் பாதிப்பு எபிடெர்மிசு பகுதியில் மட்டுமே அமைந்திருக்கும். மனிதனின் தோலில் இத்தகைய கதிர்களால் அடுக்கு எபித்தீலிய கார்சினோமா, கீழ்செல் கார்சினோமா மற்றும் மெலனோமா போன்ற பலவகை தோல் புற்றுநோய்கள் உருவாகின்றன. தோலின் மெலானின் அடர்த்தியைக் கொண்டு இப்புற்று நோயைத் தவிர்க்கலாம்., வெண்மை நிறமுடையவர்களுக்கும் மெலானின் அடர்த்தி குறைவாக உள்ளவர்களுக்கும் கதிர்பாதிப்பு விரைவில் தோன்ற வாய்ப்புண்டு. பூமத்தியரேகை நாடுகள், பகலில் வெளியில் நின்று பணிபுரிவோர், விவசாயிகள் ஆகியோருக்கு ஒளிக்கதிரியக்கம் பாதிக்கலாம். தோல் மாற்றுச் சிகிச்சைபாதிக்க்கப்பட்ட தோல் பகுதியைச் சிர் செய்ய தோல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உடலின் ஒரு பகுதியில் நல்ல நிலையில் உள்ள தோல் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பொருத்தப்படுவது இச்சிகிச்சை முறையாகும். அங்கு புதிய செல்கள் வளர்ந்து பாதிக்கப்பட்ட தோல் சீர் செய்யப்படுகிறது. இரட்டையர்களின் தோலை மாற்றிப் பொருத்தலாம். ஆனால் வேறொருவரின் தோல் அல்லது மற்றொரு விலங்கின் தோலை பொருத்த இயலாது. அத்தோல் நிராகரிக்கப்பட்டு விடும். டெர்மடைட்டிசு தோல் நோய்ஒவ்வாமை மற்றும் குறிப்பிட்ட காரணம் ஏதுமின்றி உடல் தோலில் வீக்கங்கள் ஏற்படுவது இவ்வகை தோல் நோயாகும். தொடர்பு தோல் நோய்தோலுடன் சில பொருட்கள் தொடர்பு கொள்வதால் தோலில் கனற்சி தோன்றும். தொடர்பு கொள்ளும் பொருளினால் நேரடியாகவோ அல்லது ஒவ்வாமையினாலோ இந்நோய் ஏற்படலாம். சில வகை தாவரங்கள், மருந்துகள் , சோப்புகள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படலாம். அரிப்பு அல்லது தோலில் பிளவு போன்றவை இதனால் ஏற்படும். ஒளிச்சரும நோய்சிலருக்கு சூரிய ஒளி படுவதால் அவ்விடங்களில் சிறு கட்டிகள் அல்லது சிறு படைகள் தோன்றுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia