த சீக்ரெட் (நூல்)
த சீக்ரெட் (நூல்) ரோண்டா பிரயன்[1] எழுதிய சீக்ரெட் [1] என்ற நூல் 2006ம் ஆண்டில் வெளியான நூல்களில் ஒன்றாகும். 46 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல், ஈர்ப்பு விதியைப் பற்றியும், அதனை கையாளும் முறைகளையும், நேர்மறை சிந்தனைகளைப் பற்றியும் விவரிக்கிறது. நேர்மறை சிந்தனையே ஒருவர் தன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும், தன்னிறைவு அடைவதற்கும், அடித்தளமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது. இந்த நூல், நூலாக வெளிவருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே காணொளி வடிவில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது [2]. நூலாசிரியர்ரோண்டா பிரயன் [3] அவர்கள் 2006 வரை, ஆசுத்ரேலிய தொலைக்காட்சி தொடர் இயக்குநராக ஊடகங்களுக்கு அறிமுகமானவர், 2006ம் ஆண்டில் வெளியான தனது சீக்ரெட் என்ற நூலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார், 2007ம் ஆண்டு டைம்ஸ் வார இதழ் [4] வெளியிட்ட நூறு பிரபலங்களில் இவரின் பெயரும் இடம்பிடித்து குறிப்பிடத்தக்கது. தொடக்கத்திலிருந்தே நமது சிந்தனைகளை கட்டுப்படுத்தி, அந்த நூலின் போக்கிற்கு, நம்மை அழைத்து செல்லும் அந்த எழுத்து நடைதான், இந்த நூலின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியும், 'மனம் போல் வாழ்வு' தமிழக சாலைகளில் செல்லும் தானிகளின் பின்னால் காணப்படும் எளிய வாசகம் தான், இதைத்தான் 198 பக்கஙகள் கொண்டு நிறுவுகிறார் ரோண்டா பிரயன். நூலின் உள்ளடக்கம் |
Portal di Ensiklopedia Dunia