த போரம் (பல்கடை அங்காடி)

The Forum
Forum Mall Bangalore
Map
பொதுவான தகவல்கள்
இடம்Bangalore, இந்தியா
திறப்பு2004
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை5
தளப்பரப்பு72,000 m2 (780,000 sq ft)

த போரம் (பல்கடை அங்காடி) பெங்களூருவில் உள்ள ஓசூர் சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பல்கடை அங்காடி. ஒரு பல மாடி புத்தகக் கடை, 11 சினிமா அரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகளும் உள்ள இந்த அங்காடி, பெங்களூருவின் முதல் முழு அங்காடி ஆகும்.

இளைஞர்களுக்கு மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வங்காடி, பெங்களூருவிற்கு வருகை தரும் அனைவரையும் ஈர்க்கின்றது. இந்த ஐந்து மாடிக் கட்டிடத்தில், 780,000 சதுர அடி பரப்பளவில் அங்காடிகள் அடங்கி உள்ளன. செருப்பு முதல் உடற்பயிற்சி சாதனங்கள் வரை அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. இந்த பல்கடை அங்காடியின் முக்கியாமான ஈர்ப்பு, இங்கு அமைந்துள்ள 11 அரங்குகள் கொண்ட பி.வி.ஆர். சினிமாஸ் ஆகும். இங்குள்ள உணவு அரங்கை "தி ட்ரான்ஸிட் லௌஞ்"என்று அழைக்கின்றனர். இது விமான நிலையத்தில் உள்ள ட்ரான்ஸிட் லௌஞ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 11 அரங்குள்ள பி.வி.ஆர் சினிமாஸ், 2004 இல் பிரெஸ்டீஜ் குழுவால் கட்டமைக்கப்பட்டது.

அமைவிடம்

இந்த பல்கடை அங்காடி அமைந்துள்ள இடம், ஹ்யூலட் பேக்கார்ட் (HP) ராபர்ட் பாஷ் GmbH போன்ற பெரிய கம்பெனிகளின் நடுவே அமைந்துள்ளது. இங்கு வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், கிறிஸ்து பல்கலைகழகம்த்தின் மாணவர்களாகும். கிறிஸ்து பல்கலைகழகம் இங்கிருந்து 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஃபோரம் நிர்வாகம், வைட்ஃபீல்டில், "தி ஃபோரம் வேல்யூ மால்" என்ற பெயரில் புதிதாக ஒரு பல்கடை அங்காடி உருவாக்கியுள்ளனர்.

வேறு அமைவிடங்கள்

தற்போது சென்னையிலுள்ள வடபழனியில் "ஃபோரம் விஜயா மால்" என்ற பெயரில் ஒரு பல்கடை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொச்சி, கோவை, ஹைதராபாத் மற்றும் மங்கலூர் போன்ற இடங்களிலும் புதிதாக திறக்கப்பட உள்ளன. ஹைதராபாதில் திறக்கப்பட உள்ள ஃபோரம் அங்காடியின் பெயர் "தி ஃபோரம் க்ரிஸ்டல் மால்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில், சென்னை வடபழனியிலுள்ள, 'ஃபோரம் விஜயா' பல்கலை அங்காடி.

வாகன நிறுத்தம்

இங்கு இரண்டு வாகன நிறுத்த இடங்கள் உள்ளன. ஒன்று- கட்டிடத்தினுள் உள்ள அடுக்கு மாடி வாகன நிறுத்த இடம். இதற்கு உள்ளே செல்ல, டைரி சர்க்கிள்-கோரமங்களா சாலை மற்றும் அடுகொடி-கோரமங்களா சாலை என இரண்டு வழிகள் உள்ளன. அது தவிர, எப்போதும் நிரம்பி உள்ள இன்னொரு வாகன நிறுத்த இடம் அடுகொடி-கோரமங்களா சாலை மூலமாக உள்ளே செல்லும் வழியுடன் அமைந்துள்ளது.

நெருப்பு

ஜனவரி 26, 2009 அன்று ஒரு சின்ன மின்சாரச் சிக்கலினால் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தீ அணைக்கப்பட்டது. ஆனால் இந்த அங்காடியில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று பொதுமக்கள் புகார் சூட்டி வருகின்றனர்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya