நகச்சொத்தை![]() நகச் சொத்தை அல்லது நகப்படை (Onychomycosis, also known as tinea unguium,) என்பது நகத்தில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பு விளைவு ஆகும்.[1] இந்த பாதிப்பு கால் நகங்களிலோ அல்லது விரல் நகங்களிலோ தோன்றலாம். என்றாலும் கால் நகங்களிலேயே பெரும்பாலும் இது தோன்றுகிறது. இதற்கான சிகிச்சையானது அறிகுறிகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். என்றாலும் இதற்கு பூஞ்சைக் கொல்லி மருந்தே பரிந்துரைக்கப்படுகிறது.[2] இது வயதுவந்தோரில் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காட்டினருக்கு ஏற்படுகிறது.[3] இது நகங்களில் ஏற்படும் மிகப் பொதுவான நோய் ஆகும்.[4] இதைக் குறிக்கும் மருத்துவப் பெயரான Onychomycosis என்ற சொல்லானது பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் ὄνυξ ónux "நகம்", μύκης múkēs "பூஞ்சை" மற்றும் -ωσις ōsis "வினைசார் நோய்" என்பதாகும். அறிகுறிகள்நகச் சொத்தையின் பொதுவான அறிகுறியானது நகம் பால்போல் வெளுத்துக் காணப்படும் சிலருக்கு நகம் மஞ்சள் நிறத்தில் கோடு கோடாகத் தெரியும். நகம் தடித்து கரடுமுரடாகத் தெரியும். நாளடைவில் நகம் பிளவுபட்டு உடைந்துவிடும். இறுதியில் அது தானாகவே விழுந்துவிடும். இதனால் வேகமாக ஓடவோ அல்லது வேகமாக நடக்கவோ இயலாத நிலை ஏற்படும். சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால், நகத்துக்கு அடியிலும், சுற்றிலும் உள்ள தோலிலும் வலி ஏற்படலாம்.,[5] மருத்துவம்இந்த நோயிக்கு சிகிச்சையாக பூஞ்சைகளைக் கொல்ல வீரியமான மாத்திரை, மருந்துகளும், வெளியில் பூச களிம்புகளும் அளிக்கப்படுகின்றன. என்றாலும் இது குணமாக நீண்டகாலம் எடுக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia