நடுவண் ஒற்று முகமை (Central Intelligence Agency) ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனம். சிஐஏ (CIA) என்று பரவலாக அறியப்படும் இது அமெரிக்க அரசின் ஒரு துறையாகும். தேசிய பாதுகாப்பு பற்றிய புலனாய்வு மதிப்பீடுகளை அமெரிக்க அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு வழங்குவதுடன், அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் ஆணைப்படி மறைமுகச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.[5]
இரண்டாம் உலகப்போரின் போது, அச்சு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படைத்துறை ஒற்று நடவடிக்கைகளை ஒருங்கமைக்க உருவாக்கப்பட்ட மேல்நிலை உத்தி சேவைகளுக்கான அலுவலகம் (Office of Strategic Services - OSS) என்ற அமைப்பின் வாரிசு அமைப்பே சிஐஏ. போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் சிஐஏ அமைப்பைத் தோற்றுவித்தது. இதன் முதன்மைப் பணிகள் - பிற நாட்டு அரசுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது வேவு பார்த்து, தகவல்களைச் சேகரித்து அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அளிப்பதும் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்குவதுமாகும். மேலும் துணை இராணுவப் படைகளை பயன்படுத்தி மறைமுக படைத்துறை நடவடிக்கைகள், தனது சிறப்புச் செயல்பாடு பிரிவின் மூலம் பிற நாட்டு அரசியல் சூழலில் ஆதிக்கம் செலுத்ததல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. 2004 ஆம் ஆண்டு வரை சிஐஏ மற்றும் அதன் பொறுப்புகள் புனரமைக்கப்பட்டன. அது வரை அமெரிக்க அரசின் பல ஒற்று நிறுவனங்களை ஒருங்கமைக்கும் பணியினை சிஐஏ செய்து வந்தது. அவ்வாண்டு இயற்றப்பட்ட ஒற்று புனரமைப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு இயக்குனரகம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அமெரிக்க ஒற்று முகமைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அதற்கு வழங்கியது.[6][7][8][9][10]
தற்போது தேசியப் புலனாய்வு இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் பதினாறு அமெரிக்க உளவு அமைப்புகளுள் ஒன்றாக சிஐஏ உள்ளது. மனித வேவு மற்றும் அதனால் கிட்டும் தகவல்கள், பொதுவான பகுப்பாய்வு பிற நாடுகள், அவற்றின் அரசுகள் மற்றும் உளவு அமைப்புகள் மீது வேவு பார்த்தல் போன்றவை சிஐஏவின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன், டி. சி. க்கு அருகே வர்ஜீனியா மாநிலத்தில் லாங்க்லி என்ற இடத்தில் சிஐஏவின் தலைமையகம் அமைந்துள்ளது. லேங்க்லி, தி கம்பனி, தி ஏஜென்சி ஆகியவை சிஐஏ வைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பிற பெயர்களாகும்.[11][12][13][14]
Johnson, Loch K. (1991). America's Secret Power: The CIA in a Democratic Society. Oxford University Press. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
மெக்காய், ஆல்ஃப்ரட் டபிள்யூ. (2006): எ க்வஸ்டன் ஆப் டார்ச்சர்: சிஐஏ இன்ட்டரோகேஷன், ஃப்ரம் தி கோல்ட் வார் டு தி வார் ஆன் டெரர் , ஓவல் புத்தகங்கள், ஐஎஸ்பிஎன் 0805082484
Prouty, L. Fletcher (Col. USAF, (Ret.)) (1973). The Secret Team: The CIA And Its Allies In Control Of The World. Ballantine Books, Inc. ISBN345-23776-5-195. {{cite book}}: Check |isbn= value: length (help)CS1 maint: multiple names: authors list (link)
வேலஸ், ராபர்ட்; மெல்டன், எச். கெனித்; ஸ்கெலிசைனர், ஹென்றி ஆர். (2008). ஸ்பைகிராப்ட்: தி சீக்ரட் ஹிஸ்டரி ஆப் தி சிஐஏஸ் ஸ்பைடெக்ஸ், ஃப்ரம் கம்யூனிசம் டு அல்-கிவைதா . டட்டன். ஐஎஸ்பிஎன் 0525949801