நடு பழைய கற்காலம்நடு பழையகற்காலம் (ஆங்கிலம்: Middle Paleolithic) என்பது பழையகற்காலத்தின் இரண்டாம் உட்பிரிவு ஆகும். 300,000 இருந்து 30,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமே நடு பழையகற்காலம் ஆகும். உலகின் வெவ்வேறு பகுதிகளிடையே இக்காலம் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு உட்படும். நடு பழையகற்காலத்தை தொடர்ந்து, 50,000 இருந்து 40,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்தது மேல் பழையகற்காலம் (மூன்றாம் உட்பிரிவு) ஆகும் .[1] சமூக அடுக்கமைவுஊட்டச்சத்துநடு பழையகற்காலத்தில் சேகரிப்பும் வேட்டையாடுதலுமே உணவுத்தேவைகளை பூர்த்தி செய்த போதிலும், மக்கள் உணவுவழக்கில் கடல் உணவையும் சேர்த்துகொண்டனர். பதப்படுத்தி சேமிக்க, இறைச்சியை சுடவும் காயவைக்கவும் ஆரம்பித்தனர். எடுத்துகாட்டாக, 90,000 ஆண்டுகளுக்கு முன்பே, நடு பழையகற்கால வாசிகள் இன்றைய காங்கோ மக்களாட்சிக் குடியரசின் பகுதிகளை ஆக்கிரமித்து, 6 அடிநீள (1.8மீ) பூனைமீனை சிறப்புமிக்க கூர்முனைகளைகொண்டு வேட்டையாடி உள்ளனர்;[1][2] மேலும் ஆப்ரிக்காவில், நியாண்டர்த்தல்களும் நடு பழையகற்கால மனிதர்களும் (Homo sapiens) உணவுக்காக மட்டிகளை பிடித்துள்ளனர். இதை நிருபிக்கும் வண்ணம் இத்தாலியில் உள்ள 110,000 பழமையான நியாண்டர்த்தல்களின் தளங்களிலிலும்; ஆப்ரிக்காவின் பின்னாக்கிள் பாயிண்ட்-ல் உள்ள நடு பழையகற்கால மனிதர்களின் (Homo sapiens) தளங்களிலிலும், மட்டிகளை சமையலுக்கான சான்றுகள் உள்ளன.[1][3] தொழில்நுட்பம்![]() தளங்கள்குகைத் தளங்கள்
திறந்தவெளித் தளங்கள்
References
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia