நத்தம் பட்டி
நத்தம் பட்டி (ஆங்கிலம் : en:Natham Patti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1]. இது தென்காசி மக்களவைத் தொகுதியில் உள்ள திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் உட்பட்டது. இது வத்திராயிருப்பு ஊராட்சிஒன்றியத்தில் உள்ளது.[2] இது மதுரை - இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றிலும் குன்னூர், கிருஷ்ணன்கோயில், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் போன்ற ஊர்கள் உள்ளன. இங்கு சுற்றி உள்ள அனைத்து ஊர்களுடனும் சாலை போக்குவரத்து உள்ளது. இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். இவ்வூர் மக்கள் அருகில் உள்ள சிவகாசிக்கு தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்கின்றனர். அமைவிடம்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்விருதுநகர் மாவட்டம் பரணிடப்பட்டது 2011-12-28 at the வந்தவழி இயந்திரம்
|
Portal di Ensiklopedia Dunia