நந்தனா சென்

நந்தனா சென்
தாகூர் இலக்கிய விருதுகளில் நந்தனா சென்
பிறப்பு19 ஆகத்து 1967 (1967-08-19) (அகவை 57)
கொல்கத்தா, இந்தியா
இருப்பிடம்இந்தியா, ஐ.அ.நா
பணிநடிகை, ஆவுவலர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997-தற்போது

நந்தனா சென் (Nandana Sen; Bengali: নন্দনা সেন; அல்லது நந்தனா தேவ் சென்) என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். எழுத்தாளராகவும் சமூகச் செயற்பாட்டளாராகவும் அறியப்படுகிறார்.[1]

பின்புலம்

நந்தனா சென் "நோபல் பரிசு பெற்ற" பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் பத்மஸ்ரீ நபநீதா தேவ் சென் தம்பதியரின் மகளாவார், நபநீதா தேவ் சென் தற்கால வங்காள இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராவார்.

நந்தனா சென், 1970 ஆகஸ்டு 19 இல், இந்தியாவின் கிழக்கத்திய நகரமான கல்கத்தாவில் பிறந்தார். அவர் தனது வளரும் பருவத்தை ஐரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் கழித்தார். ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்றார்.இலண்டன் இராயல் அகாதமியில் நாடகக்கலையில் பயிற்சி பெற்றார்.

தொழில் வாழ்க்கை

சென் "த டால்" திரைப்படத்தின் மூலமாக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். பிளாக் என்ற திரைப்படத்தில் ராணி முகர்ஜியின் 17 வயது சகோதரியாக நடித்ததன் மூலம் நந்தனா பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். 2008 இல் பிரித்தானிய தொலைக்காட்சித் தொடரான ஷார்ப்பில், ஷார்ப்ஸ் பெரில் என்ற பகுதியில் நடித்தார். 2014 இல் ரங் ரசீயா என்னும் இந்தித் திரைப்படத்தில் சுகந்தா வேடத்தில் நடித்துப் பேர் பெற்றார்.

எழுத்தாளராக

குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியுள்ளார். அண்மையில் 'மம்பியும் காட்டுத்தீயும்' என்னும் பெயரில் ஒரு கதைப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். தம் தாயாரின் வங்கக் கவிதை நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

அவர் ஹோர்ஸ்ட் யோர்கான் ரட்ச் என்பவரை மணந்தார்.

திரைப்பட விவரங்கள்

இங்கு காணும் திரைப்பட விவரங்கள், நந்தனா சென்னின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை.[2]

ஆண்டு நடித்த திரைப்படம் கருத்துரைகள்
2009 தி ஃபாரெஸ்ட்
2008 ரங் ரசியா , தி வோர்ல்டு அன்சீன் , இட்ஸ் எ மிஸ்மேட்ச்
2007 ஸ்ட்ரேஞ்சர்ஸ் , மேரிகோல்டு
2005 தி வார் விதின், மை வைஃப்'ஸ் மர்டர், டேங்கோ சார்லி, பிளாக்
2004 தி மிராக்கிள்: எ சைலண்ட் லவ் ஸ்டோரி
2003 போக்சு, தி மித் ,
2001 பிரேஞ்ச்சி
2000. செட்யூசிங் மார்யா
1998 தி டால்/குடியா
ஆண்டு சிறிய வேடத்தில் கருத்துரைகள்
2006 தி சைலன்ஸ்/சுப்பி
2001 பாரெவெர்

குறிப்புகள்

  1. http://www.deccanchronicle.com/sunday-chronicle/shelf-life/150516/fables-of-the-forest.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ""அதிகாரப்பூர்வமான திரைப்பட விவரங்கள்"". Archived from the original on 2009-12-27. Retrieved 2009-11-14.

பிற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya